Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பால தண்டாயுதபாணி
  ஊர்: கோபி
  மாவட்டம்: ஈரோடு
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  அமாவாசை, மாத கிருத்திகை, சஷ்டி, தைப்பூசம், பங்குனி, உத்திரம் ஆகிய சிறப்புமிக்க திருவிழாக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தினமும் மூன்று கால பூஜைகள் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு செய்யப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  பச்சைமலை குன்றில் பாலமுருகனாகவும், பவளமலை குன்றில் முத்துக்குமார சுவாமியாகவும், ஆண்டவர்மலை குன்றில் பால தண்டாயுதபாணி சுவாமியாகவும் வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை வழங்கி பக்தர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விளங்குகிறார்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் , கோபி - 638452 ஈரோடு மாவட்டம்  
   
போன்:
   
  +91-4285-222 125 
    
 பொது தகவல்:
     
  கோயில் பிரகாரத்தில் விநாயக பெருமான், சிவன், சக்தி, வள்ளி-தேவசேனா, மஹாவிஷ்ணு, ஆதித்ய நவக்ரஹம், சனீஸ்வரர் ஆகிய மூர்த்திகள் இடம்பெற்றுள்ளனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  நோயுற்றவர்கள் கோயில் மண்டபத்தில் தங்கி தரிசித்து வழிபாடு செய்கின்றனர் இதன்மூலம் குணம் பெற்று செல்பவர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி நலம்பெறுகின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
  ஆண்டாண்டு காலங்களாக ஆன்றோரும், சான்றோரும் வழி வழியாய் வழிபடும் அற்புத ஸ்தலமாக கோபிசெட்டிபாளையம் ஆண்டவர் மலை முருகன் கோயில் திகழ்கிறது.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடிகொண்டிருப்பான் என்பதை உணர்த்தும் விதத்தில் கோபியில் உள்ள மூன்று குன்றுகளிலும் முருகப்பெருமான் வெவ்வேறு ரூபங்களில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோபியில் பச்சைமலை, பவளமலை, ஆண்டவர்மலை என மூன்று குன்றுகள் இயற்கையாகவே அமையப்பெற்றுள்ளது.

பச்சைமலை குன்றில் பாலமுருகனாகவும், பவளமலை குன்றில் முத்துக்குமார சுவாமியாகவும், ஆண்டவர்மலை குன்றில் பால தண்டாயுதபாணி சுவாமியாகவும் வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை வழங்கி பக்தர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விளங்குகிறார்.

சங்க இலக்கியம், தமிழ்ச்சங்கம், சங்கத்தமிழ் ஆகிய எல்லா சூழ்நிலைகளிலும் போற்றி புகழப்படும் தெய்வம் முருகப்பெருமான். சிவபெருமானின் ஐந்து முகச்சுடரும், நெற்றி கண்ணின் சுடரும் சேர்ந்து ஆறுபொறிகளால் உதித்தவர் ஆறுமுகன். சமயங்கள் 6, கோஷங்கள் 6, ஆதார கமலங்கள் 6, வேத இதிகாசங்கள் 6, ஞான சாதனை 6, சாஸ்திரம் 6 ஆகிய ஆறு அம்சங்களும் முருகப்பெருமானுக்கு உரியவை.இப்படிப்பட்ட கருணைக்கடலாக விளங்கும் பாலதண்டாயுதபாணி சுவாமி ஆண்டவர் மலை குன்றில் நின்றகோலத்தில் வீற்றிருந்து வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை வாரி வழங்கி அருள்பொழிந்து வருகிறார்.
 
     
  தல வரலாறு:
     
  பல ஞானிகள் முருகனின் அருளை வெளிப்படுத்தி உணர்த்தியுள்ளனர். ஆதார மூலக்கோயிலின் கால அளவை நிர்ணய படுத்த முடியாத அளவிற்கு ஆண்டவர் மலை முருகன் கோயில் பழமை வாய்ந்தது.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இக்குன்றில் குடிகொண்ட முருக பெருமானை போற்றி வணங்கி பூசாரி சித்தர் என்பவர் பக்தர்களுக்கு அருள்வாக்கு கொடுத்து வந்தார். அதன் பின்னர் குப்பணசித்தர் என்பவர் காற்று ஆதாரத்துடன் பல காலங்கள் அருள் பாலித்து வந்தார். கடந்த 1980ம் ஆண்டு கோயில் திருப்பணிகள் துவங்கப்பட்டது. தொடர்ந்து பத்து வருடங்களாக கோயில் திருப்பணிகள் நடந்து 1990ம் வருடம் நிறைவு பெற்றது.
 
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar