Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கொங்காலம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கொங்காலம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கொங்காலம்மன் (கொங்கலாயி)
  தல விருட்சம்: அரசமரம்
  தீர்த்தம்: காவிரி தீர்த்தம்
  ஊர்: ஈரோடு
  மாவட்டம்: ஈரோடு
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  தமிழ் புத்தாண்டான சித்திரை முதல் தேதியும், ஆங்கில புத்தாண்டான ஜனவரி முதல் தேதியும் அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நவராத்திரி ஒன்பது நாளும் விசேஷ பூஜையும், ஹோமமும் நடக்கிறது. விஜயதசமியன்று சண்டி ஹோமம் நடக்கிறது. கார்த்திகை தீபத்தன்று கோயில் வெளிப்புறமுள்ள தீப கம்பத்தில் அகண்ட தீபம் ஏற்றப்படும். மார்கழி மாதம் ழுவதும் அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  இத்தல அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கொங்காலம்மன் திருக்கோயில், ஈரோடு- 638 001, ஈரோடு மாவட்டம்.  
   
போன்:
   
  +91-424-221 4421 
    
 பொது தகவல்:
     
  கோயில் பிரகாரத்தின் இடது புறத்தில் வற்றாத தீர்த்த கிணறு உள்ளது. மேலும் மதுரைவீரன் சாமி, பொம்மி, வெள்ளையம்மாள் ஆகிய இரு தேவியாருடன் எழுந்தருளியுள்ளார்.

இது தவிர கருப்பண்ணசாமி கோயில், கன்னிமார், பேச்சியம்மன், காட்டேரி, முனியப்பன், வீரபத்திரன் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனியாக சிறிய கோயில்கள் உள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
 

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.



 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
    
 தலபெருமை:
     
  இக்கோயிலில், கி.பி.13ம் நூற் றாண்டை சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு ஒன்றும், வீரபாண்டியன் இரண்டாம் காலத்து கல்வெட்டும், 19ம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இக்கோயிலின் ஸ்தல விருட்சமாக பெரிய அரசமரம் உள்ளது. இந்த மரம் மிகவும் பழமை வாய்ந்தது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலின் திருப்பணிக்காக தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு பூமிக்கு அடியில் குழி தோண்டப்பட்டது. அப்போது அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய இரண்டரை அடி உயரம் உள்ள செப்பினால் செய்யப்பட்ட அம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலையையும் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

பொது கோயில்: கொங்கு நாட்டில் உள்ள கோயில்களில் கொங்கலம்மன் கோயில் முக்கியமானது. எனவே இந்த கோயிலை சமுதாய பொது கோயில் என்பர். கொங்கு நாட்டு கூட்டம் பல சமயங்களில் இங்கு நடந்துள்ளது. பல சமுதாய ஒப்பந்தங்கள் இங்கு எழுதப்பட்டுள்ளன.

நீதி கிடைக்காதவர்கள் இங்கே வந்து நீதி கேட்டு போராடியுள்ளனர். ஆண்களும் பெண்களும் கொங்கலம்மன் பெயரை இன்றளவும் வைத்து வருகின்றனர்.

மூன்று நிலை புதிய ராஜகோபுரம் கம்பீரத்துடன் அழகாக காணப்படுகிறது. கோயிலின் உட்சென்றால் பலிபீடம், கொடிமரம், சிம்மவாகனம், கல்தூண்களில் அமைந்த தூரிக்கல் உள்ளது. இந்த தூரிக்கல் 1815ம் ஆண்டு அமைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது.

 
     
  தல வரலாறு:
     
  ஈரோட்டில் முதன்மையான கோயிலாக கொங்காலம்மன் கோயில் உள்ளது. கொங்கு நாட்டின் குல தெய்வம் இவள். செல்லமாக "கொங் கலாயி' என்று மக்கள் போற்றி வழிபட்டு வருகின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. இந்த கோயிலில் இருந்த கொங்கலம்மனை சிலர் தங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்வதற்காக மாட்டு வண்டியில் திருடி சென்றனர். வெப்படை ஆனங்கூர் அருகே சென்ற போது, வண்டியின் அச்சு முறிந்தது. இதையடுத்து அம்மனை அங்கேயே விட்டு விட்டு அனைவரும் ஓடிவிட்டனர். ஆனங்கூர் மக்கள் இந்த அம்மன் சிலையை பார்த்து பரவசமடைந்து அங்கேயே பிரதிஷ்டை செய்து தெய்வமாக வழிபட்டனர்.

இச்சம்பவத்தை கேள்விப்பட்ட ஈரோடு மக்கள் ஆனங்கூர் சென்று கொங்கலம்மனை வழிபட்டனர். இது ஆதி கொங்கலம்மன் என்றழைக்கப்படுகிறது. இந்த அம்மன் 12 கைகளுடன் காட்சி தருகிறார். இந்த கைகளில் சூலம், உடுக்கை, பாம்பு, வேதம், மணி, கபாலம் போன்றவை இடம் பெற்றுள்ளது. இந்த அம்மன் சிலையை பார்த்த மக்கள் ஈரோட்டில் புதிதாக ஒரு அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட தொடங்கினர். ஈரோட்டில் பிற கோயில்களில் விழாக்கள் கொண்டாடும் போது காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் முதல் தீர்த்தம் கொங்கலம்மனுக்கு அபிஷேகம் செய்த பின்னர் தான் மற்ற கோயில்களுக்கு கொண்டு செல்வது வழக்கத்தில் உள்ளது.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறாள்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar