Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கைலாசநாதர்
  அம்மன்/தாயார்: பிரசன்னநாயகி
  தல விருட்சம்: வில்வமரம்
  ஊர்: நெடுங்குடி
  மாவட்டம்: புதுக்கோட்டை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஆடிபூரத்தன்று அம்பாளுக்கு திருவிழாவும், திருக்கல்யாணமும், கடைசித் திங்களில் ஐயப்பன் சன்னதியில் படிபூஜையும் நடக்கிறது. மாசி மாத மகா சிவராத்திரி விழாவில், தமிழகத்தின் பலபகுதியில் இருந்து 48 நாட்கள் விரதமிருந்து இந்த கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்களும் வருகின்றனர்.  
     
 தல சிறப்பு:
     
  திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது போல, புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி கைலாசநாதர் கோயிலிலும் பவுர்ணமிகளில் கிரிவலம் நடக்கிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பிரசன்னநாயகி சமேத கைலாசநாதர் திருக்கோயில், நெடுங்குடி - 622 209, புதுக்கோட்டை மாவட்டம்.  
   
போன்:
   
  - 
    
 பொது தகவல்:
     
  மூலவருக்கு காசி நாதர் என்ற பெயரும் உண்டு. கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், அம்மன் சன்னதி மற்றும் பரிவார தெய்வங்களுடன் கோபுரங்களும் உள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியர் இங்கு வந்து ஒரு நாள் தங்கியிருந்து சர்ப்பநதியில் நீராடி தேரோடும் வீதியில் 5 முறை வலம் வந்து பிரசன்ன நாயகிக்கும், கைலாச நாதருக்கும் அபிஷேக, அர்ச்சனைகள் செய்து வணங்கினால் மகப்பேறு உண்டாகும்.

மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் பெற்றோருடன் வந்து இதை செய்தால் திருமணம் உடனே நடக்கும்.

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சன்னதி முன்பு மண்டபத்தின் உச்சியில் அமைக்கப்பட்ட 12 ராசி சக்கரத்தின் நேராக கீழே தரையில் பதிக்கப்பட்ட பத்மபீடத்தில் அமர்ந்து "ஓம் நமசிவாய' என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்
 
    
நேர்த்திக்கடன்:
    
  ஒவ்வொரு தமிழ்மாத முதல் தேதியன்றும் மாஸசங்கரம பூஜை நடைபெறும். இந்த பூஜை காலத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை திருமணமாகாத பெண்கள், சுமங்கலிகள் மற்றும் ஜாதகத்தில் பித்ரு தோஷம், புத்திரதோஷம், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், மற்ற ஆண்களும், பெண்களும் அம்மனுக்கும், நாதருக்கும் அர்ச்சனை செய்து கொடிமரத்தின் முன்பு ஐங்கோணக் கோலமிட்டு நெய்தீபம் ஏற்றி மன ஒருமையுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வந்தால் சகல தோஷங்களும் நீங்கி மங்களம் உண்டாகும். 
    
 தலபெருமை:
     
  திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது போல, புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி கைலாசநாதர் கோயிலிலும் பவுர்ணமிகளில் கிரிவலம் நடக்கிறது. இந்த ஆலயத்தின் அடிவாரத்தில் கிரிவல வீதியில் ஈசான்ய வடகிழக்கு திசையில் உள்ள பாம்பாறு நதியில் நீராடி சுவாமியை தரிசித்தால் வேண்டிய பிரார்த்தனை நிறைவேறும்.

இங்கு பவுர்ணமி, அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு நாட்களில் கிரிவலமும், பிரதோஷ நாட்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பஜனை வழிபாடும் நடக்கிறது.
 
     
  தல வரலாறு:
     
 

புராண காலத்தில் நெடுங்குடியில் வில்வமரங்கள் நிறைந்த மண்மலை குன்றுகள் இருந்தது. இங்கு வந்த பெருஞ்சீவி, சிரஞ்சீவி என்னும் சகோதரர்கள் சிவபெருமானை வழிபட எண்ணினர். அண்ணன் பெருஞ்சீவி தன் தம்பி சிரஞ்சீவியிடம் வழிபாட்டிற்காக காசியிலிருந்து புனித லிங்கம் எடுத்து வர கூறினார். அண்ணன் உத்தரவை ஏற்று தம்பி காசிக்கு சென்றார். ஆனால் பூஜைக்கு உரிய நேரத்தில் தம்பி வராததால், தானே சிவலிங்கம் ஒன்றை செய்து அண்ணன் சிவவழிபாடு செய்தார்.


காசிக்கு சென்ற தம்பி சிரஞ்சீவி தாமதமாக வந்து, தான் கொண்டுவந்த சிவலிங்கத்தை வைத்து மீண்டும் பூஜை செய்ய சொன்னார். அண்ணன் மறுக்கவே, ஆத்திரமடைந்த தம்பி  மண்ணால் செய்த லிங்கத்தையும் இந்த மலையையும் அழிக்கிறேன் பார்... என்று அண்ணனிடம் சவால் விட்டான். திருமாலை தியானித்து கடும் தவத்தில் மூழ்கினான். மூத்தவன் கலங்கினான். தம்பியில் செயலால் லிங்கத்துக்கு பாதிப்பு ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்ற வேண்டுதலுடன், தானும் திருமாலைக் குறித்து தவத்தில் ஆழ்ந்தான்.


அசுர சகோதரர்களுக்கு அருள்புரிய சித்தம் கொண்டார் திருமால் . சின்னச் சிரஞ்ஜீவிக்காக ஆதிசேஷனையும் பெரிய சிரஞ்ஜீவிக்காக கருடனையும் அனுப்பிவைத்தார். ஆதிசேஷன், மண் லிங்கம் அமைத்த மலையை அசைக்க ஆரம்பித்தது. கருடனோ அதைத் தடுக்கும் விதமாக மலையைச் சுற்றி வட்டமிட ஆரம்பித்தது. கருடனைக் கண்டதும் பாம்பு அங்கிருந்து ஓடிவிட்டது. கருடனும் திருமாலிடம் திரும்பியது. அப்போது அசுர சகோதரர்கள் முன் காட்சியளித்த திருமால் உரிய காலத்தில் சிவபூஜை செய்வதே சிறந்தது. இதைப் புரிந்துகொண்டு சகோதரர்கள் இருவரும் ஒற்றுமையுடன் இருந்து வழிபடுங்கள். நீங்கள் சிவபூஜை செய்த இந்தத் தலம் புகழ்பெற்றுத் திகழும் என்று அருள்புரிந்து மறைந்தார்.


காலங்கள் ஓடின. சிவலிங்கம் மண்ணுக்குள் மறைந்தது. பல்லாயிரம் வருடங்கள் கழித்து. இந்தப் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரிகள் சிலர் இங்கே சுயம்புவாக வெளிப்பட்ட சிவலிங்கத் திருமேனியைத் தரிசித்தனர். அந்த லிங்கத்துக்கு ஒரு படி பால் ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டுச் சென்றனர். மறுநாள் அந்தப் பாலுக்கு உரிய விலையாக, சிவலிங்கம் அருகில் பொற்காசுகள் இருந்ததைக் கண்டனர். அடுத்தடுத்த நாட்களிலும் இந்த அற்புதம் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து. அந்த லிங்கத் திருமேனியனுக்கு படிகாசுநாதர் என்று திருபெயர் ஏற்பட்டது. இங்கு வழிபட்டால் காசியிலும், கயிலையிலும் வழிபட்ட பலன் கிடைக்க அருளினார். 13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது.


13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது போல, புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி கைலாசநாதர் கோயிலிலும் பவுர்ணமிகளில் கிரிவலம் நடக்கிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar