அயோத்தி: ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் தொடர்பான வீடியோவை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது வைரலாகியுள்ளது.
உத்திர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கான கட்டுமானத்தை கடந்த, 2020 ஆக.,5ல் பூமி பூஜையுடன், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதன்பின், கோவில் கட்டுமான பணிகள், முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதையடுத்து, கட்டுமானப் பணிகள் வேகமெடுத்துள்ளன. அடுத்தாண்டு ஜனவரி 22ம் தேதி இக்கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர நிர்வாகிகள் பிரதமர் மோடியை நேற்று (அக்.,25) சந்தித்து ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினர். இந்த நிலையில் ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் தொடர்பான வீடியோவை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், கோவில் உட்புற தோற்றம், தூண்களில் நுட்பமான கலைநயத்துடன் கூடிய சிற்பங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.