அயோத்தி கும்பாபிஷேகத்தில் பக்தர்களுக்கு வழங்கபட உள்ள சீதை வீட்டு சீதன இனிப்புகள்



அயோத்தி ; ராமாயணத்தில் சீதா தேவி பிறந்த ஊராக கூறப்படுவது, சாணக்யாபுரி. நேபாள நாட்டில் தற்போதுள்ள ஜனக்பூர் என்ற இடம் தான், இந்த சாணக்யாபுரி என பக்தர்களால் நம்பப்படுகிறது. இங்குள்ள ராம் ஜானகி கோவில் மிகவும் பிரபலம். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இந்த கோவிலில் இருந்து, 12க்கும் மேற்பட்ட வாகனங்களில், 3,000க்கும் அதிகமான பரிசு கூடைகள் சமீபத்தில் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பரிசுப் பொருட்களை, ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகத்திடம், ராம் ஜானகி கோவில் நிர்வாகி ராம் ரோஷன் தாஸ் ஒப்படைத்தார். வைர நெக்லஸ், தங்க காலணிகள், பிரத்யேக இனிப்பு பொருட்கள், ராமர், சீதா தேவி சிலைகள் ஆகியவை இந்த பரிசு கூடைகளில் இடம் பெற்றுள்ளன. நேபாளத்திலிருந்து எடுத்து வரப்பட்ட இனிப்புகளை, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தன்று பக்தர்களுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; ரங்கநாதரை தரிசித்த ராமர்!

மேலும்

ராமர் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாக கொண்டாடிய மக்கள்!

மேலும்

அயோத்தி வரலாறு... கடந்து வந்த பாதை

மேலும்