பால ராமரை பிரதிஷ்டை செய்தார் பாரத பிரதமர்; எழுதப்பட்டது புதிய அத்தியாயம்.. பலகோடி மக்களின் கனவு நினைவானது



அயோத்தி ; கடந்த 500 ஆண்டுகளாக நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை கோலாகலமாக நடைபெற்றது. அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரமாண்டமாக எழுந்துள்ள கோவிலில் பிராண பிரதிஷ்டை நிகழ்வு பிரதமர் மோடி தலைமையில் நடந்துள்ளது. இதற்காக கடந்த 11 நாட்களாக கடுமையான விரதம் இருந்து வரும் பிரதமர் மோடி அயோத்தி வந்துள்ளார். ராமாயண தொடர்புடைய பல்வேறு தலங்களுக்கு, ராமர் சென்ற வழியில் வழிபட்டு வந்த பிரதமர் மோடி, தற்போது புனித தீர்த்ததுடன் அயோத்தி கோவில் கருவறை வந்தார். தொடர்ந்து சங்கல்ப பூஜை செய்தார். தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது. மலர் தூவி, மனமுருகி வேண்டினார், பிரதமர். பிரதமருடன் பிராண பிரதிஷ்டை பூஜையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாசும் பங்கேற்றனர்.



பல நுாற்றாண்டு எதிர்பார்ப்பு, பல தலைமுறை போராட்டங்கள், நம் முன்னோர்களின் சபதங்கள் நிறைவேறும் நாள் வந்துவிட்டது. சனாதன தர்மத்தின் ஆன்மாவான, ரகுநந்தன் ராகவ ராம லல்லா, பிறந்த அவத்புரியில் மிக பிரமாண்டமான, புனிதமான கோவிலில் இருந்து ஆட்சியை துவங்கி உள்ளார். கடந்த, 500 ஆண்டுகளாக காத்திருந்த இந்த வரலாற்று மற்றும் புனிதமான நாள், நம் நாட்டில் மட்டுமல்லாமல், உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அனைத்து சாலைகளும் ஸ்ரீ ராம ஜென்மபூமியை நோக்கியே இருந்தது. அனைத்து கண்களும் மகிழ்ச்சியில் அயோத்தியை நோக்கயே இருந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வை கண்ட மக்களின் மனம் சந்தோஷத்தாலும், பெருமிதத்தாலும் நிரம்பி வழிகிறது. மிகப்பெரிய திருவிழாவை எதிர்பார்த்து காத்திருந்து பல கொடி கண்களிலும், மனசெல்லாம் மத்தாப்பூ பூத்த மகிழ்வுடனும் மக்கள் காணப்படுகின்றனர்.

பால ராமரை பிரதிஷ்டை செய்த பிரதமர்; அகிலமே காத்திருந்த அந்த நாள் வந்தது. இன்று மதியம் 12.05 மணிக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா துவங்கியது. கும்பாபிஷேகம் மதியம் 12.30 முதல் 12.45 மணிக்குள் நடைபெற்றது. இதில் 12.29 நிமிடம், 8 வினாடி முதல் 12.30 நிமிடங்கள் 32 வினாடிகள் தான் மிக நல்ல நேரம் என்பதால், இந்த நேரத்தில் குழந்தை பருவ ராமர் சிலைக்கு பிரதிஷ்டை சடங்குகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிரமாண்டமாக எழுந்துள்ள கோவிலில் பிராண பிரதிஷ்டை நிகழ்வு பிரதமர் மோடி தலைமையில் நடந்துள்ளது. இதற்காக கடந்த 11 நாட்களாக கடுமையான விரதம் இருந்து வந்த மோடி, பிராண பிரதிஷ்டை செய்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். விழாவில் பங்கேற்க ஹிந்து மத தலைவர்கள், ஜீயர்கள், சன்னியாசிகள், பிரபலங்கள் பங்கேற்றனர். மத வேறுபாடு பாராமல் அயோத்தியில் உள்ள அனைவரும் குதுாகலமாக வீடு, கடைகள் வீதிகளை அலங்கரித்து கொண்டாடி வருகின்றனர்.

ஹெலிகாப்டரில் பூத்துாவி வழிபாடு; அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நடந்தபோது ஹெலிகாப்டர் மூலம் பூத்துாவி வழிபட்டனர்.

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; ரங்கநாதரை தரிசித்த ராமர்!

மேலும்

ராமர் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாக கொண்டாடிய மக்கள்!

மேலும்

அயோத்தி வரலாறு... கடந்து வந்த பாதை

மேலும்