மகிழ்ச்சியின் மறு பெயர் ராமர் கோவில்: மஹாஸ்ரீ யுக்தேஸ்வர் சுவாமிகள் பெருமிதம்



கோவை : அயோத்தி ராமர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள, சுவாமி சிலை சாட்சாத் ராமபிரானே நின்று நம்முடன் பேசி மகிழ்வதை போல் அமைக்கப்பட்டுள்ளதாக, அகில பாரத சந்த் சமிதி மாநில தலைவரும், பாரதிய ஹிந்து சேவா சபா நிறுவனருமான, மஹாஸ்ரீ யுக்தேஸ்வர் சுவாமிகள் கூறினார். அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்ற அவர், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி: அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்றது, என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரும் பாக்கியம். ராமர் கோவில் அமைய வேண்டும் என்பது, ஒட்டுமொத்த ஹிந்துக்களின் கனவு.

பிராண பிரதிஷ்டை வைபவத்தின் போது, கோவையிலிருந்து பங்கேற்றது மிகப்பெரிய வரலாற்றுப்பதிவாகும். அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவிலில் உள்ள, சுவாமி சிலை சாட்சாத் ராமபிரானே நின்று, நம்முடன் பேசி மகிழ்வதை போல் அமைக்கப்பட்டுள்ளது. உ.பி., மட்டுமல்ல, நாடு முழுக்க உள்ள அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி தென்படுகிறது. ராமர் கோவில் அமைக்கப்பட்டதற்கு பின், நம் நாட்டின் வளர்ச்சி அபரிமிதமாகும். பொருளாதாரம், கல்வி, மருத்துவம், ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அதீத வளர்ச்சியை எட்டும். நம் நாடு மிகப்பெரிய வல்லரசாக மாறுவதற்கான, அடித்தளம்தான் ராமர் கோவில். இவ்வாறு, அவர் கூறினார்.

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; ரங்கநாதரை தரிசித்த ராமர்!

மேலும்

ராமர் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாக கொண்டாடிய மக்கள்!

மேலும்

அயோத்தி வரலாறு... கடந்து வந்த பாதை

மேலும்