அயோத்தி; அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் தரிசனம் செய்ய இன்று காலை ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கடும் குளிரிலும் காத்திருந்து தரிசனம் செய்தனர். அதிகாலை நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் அமைதியாக வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். முன்னதாக, ஸ்ரீராம ஜென்மபூமி கோவிலில் நடைபெற்று வரும் ராக விழாவில், நேற்று பிரபல நடனக் கலைஞர் ஸ்ரீமதி ஸ்வப்ன சுந்தரியின் இந்திரன், வாயு, அக்னி, யம அஷ்டதிக் வந்தனத்தில் வைகானஸ், ஸ்ரீ விஷ்ணு அர்ச்சனை, ஆகம சாஸ்திர நடனம் பக்தர்களை கவர்ந்தது.