அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் அயோத்தி ராமரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்



உத்தரபிரதேசம்: அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் ராம் லல்லாவை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவிலில் ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிரமாண்ட ராமர் கோவிலை திறந்து வைத்தார். திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, கோவிலில் 45 நாட்கள் ராக சேவை எனும் இசை வழிபாடு நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, புகழ்பெற்ற கலைஞர்கள் ராமர் முன்னிலையில் தங்கள் ராக சேவையை நடத்தி வருகின்றனர். தினமும் ராமரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அயோத்தி ராமரை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். ராமகோஷத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; ரங்கநாதரை தரிசித்த ராமர்!

மேலும்

ராமர் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாக கொண்டாடிய மக்கள்!

மேலும்

அயோத்தி வரலாறு... கடந்து வந்த பாதை

மேலும்