அயோத்தி; அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டது முதல் தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் ராமர் கோயிலில் கர்ப்பகிரகத்தைச் சுத்தம் செய்ய 1.751 கிலோ எடை கொண்ட வெள்ளி துடைப்பத்தை பக்தர்கள் ஒருவர் காணிக்கையாக அளித்துள்ளார்.
இதுகுறித்து காணிக்கை அளித்த பக்தர் கூறுகையில்; நாங்கள் பெதுலில் இருந்து வந்துள்ளோம். உலகமே ஜன 22ம் தேதியை தீபாவளியாகக் கொண்டாடியது. தீபாவளியன்று துடைப்பத்தை லட்சுமி தேவியின் வடிவில் வணங்கப்படுவதால், அகில் பாரதிய மங் சமாஜ், வெள்ளி துடைப்பத்தைப் பரிசளித்துள்ளது. இதை கர்ப்பக்கிரகத்தை சுத்தம் செய்ய பயன்படுத்த வேண்டும். 1.751 கிலோ எடை கொண்ட இந்தத் துடைப்பம் 108 வெள்ளிக் குச்சிகளைக் கொண்டது. இதன் மேல் பகுதியில் வெள்ளியாலான லட்சுமி தேவியின் உருவம் உள்ளது. என்று கூறினார்.