சுத்துார் மடாதிபதியிடம் அயோத்தி ராமர் சிலை வடிவமைத்த சிற்பி அருண் ஜோகிராஜ் ஆசி



மைசூரு, -அயோத்தியில் ராமர் கோவிலில் பால ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி அருண் ஜோகிராஜ், தனது குடும்பத்தினருடன் சுத்துார் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமர் சிலையை, மைசூரை சேர்ந்த அருண் ஜோகிராஜ் வடிவமைத்தார். ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த பின், சுத்துார் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகளிடம் நேற்று தனது குடும்பத்தினருடன் அருண் ஜோகிராஜ் ஆசி பெற்றார். பின், மடாதிபதி கூறியதாவது: ஸ்ரீராமர் அனைவராலும் விரும்பப்படும் கடவுள். அயோத்தியில் உள்ள ராமர் கோவில் தென், வட மாநில கட்டட கலைகளின் கலவையாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. நான் அயோத்திக்கு போனாலும், ராமர் கோவிலை முழுமையாக பார்க்க முடியவில்லை. உள்ளே நுழைந்தால் ராமாயணம், மஹாபாரத காட்சிகளை காணலாம். 30 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன. 70 சதவீத பணிகள் நிலுவையில் உள்ளன. ஆனாலும், கோவில் அழகாக காட்சி அளிக்கிறது. மைசூரை சேர்ந்த அருண் ஜோகிராஜ், ஒரு அற்புதமான கலைஞர். மூன்று சிற்பிகளும் போட்டிக்காக சிற்பங்களை செய்யவில்லை. அந்த வேலையை, அவர் சிரத்தையுடன் செய்துள்ளார். அவருக்கும், மடத்துக்கும் பிரிக்க முடியாத உறவு இருக்கிறது. அவர், ஜே.எஸ்.எஸ்., நிறுவனத்தில் படித்தவர். அவர் செதுக்கிய சிலைக்கு, மக்கள் அங்கீகாரம் கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். என் பணிக்கு, மடாதிபதியின் ஆசி தேவைப்பட்டது. அதனால் வந்தேன். அயோத்தியில் அவரை தரிசிப்பது சாத்தியமில்லை. பால ராமர் சிலையை கண்டு, அனைவரும் உணர்ச்சி வசப்படுகின்றனர். இந்தளவு அனைவரும் நேசிப்பர் என்று நான் நினைக்கவே இல்லை. இந்தியாவில் ஒரு சிற்பிக்கு இந்தளவு அங்கீகாரம் கிடைப்பது, இதுவே முதல் முறை. மேலும் கலைஞர்களை அடையாளம் காணும் பணி நடக்கட்டும். - அருண் ஜோகிராஜ்

யாருக்கும் கிடைக்காத பாக்கியம்; ரங்கநாதரை தரிசித்த ராமர்!

மேலும்

ராமர் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாக கொண்டாடிய மக்கள்!

மேலும்

அயோத்தி வரலாறு... கடந்து வந்த பாதை

மேலும்