Meenakshi Amman Temple

Special supplement · Part 2 · page 52 · 110 / 159

வேத ஒலி

சங்க காலத்தில் மதுரை எப்படி இருந்தது என கீழ்க்கண்டவாறு காட்டுகிறது பரிபாடல். சேரர் தலைநகரமான வஞ்சியில் வாழ்பவர்களும், சோழர் தலைநகரமான உறையூரில் வாழ்பவர்களும் விடியற்காலையில் சேவல் கூவும் சப்தம் கேட்டு கண் விழிப்பார்கள். ஆனால், பாண்டியர் தலைநகரமான மதுரையில் வாழ்பவர்கள் ஒரு நாளும் விடியற்காலையில் சேவல் கூவி எழுந்திருக்க மாட்டார்கள். மதுரையில் தினமும் அதிகாலையில் அந்தணர்கள் வேதங்களை ஓதுவார்கள். அந்த வேத ஒலி பரவி நகரை சுபிட்சமாக்கும். அந்த இனிய ஒலியைக் கேட்டுத்தான் மதுரை மக்கள் கண் விழிப்பார்களாம்.

Advertisement
Top
Advertisement