Special supplement · Part 2 · page 52 · 109 / 159
தெரிஞ்சுக்குவோமா...
மதுரை மீனாட்சி சொக்கநாதரின் கருவறை விமானத்தை இந்திர விமானம் என்பர். 32 கற்சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இதை தாங்குகின்றன. அந்த யானைகளின் பெயர்களும் அதன் அதிபதிகளும் யார் என்பதை தெரிந்து கொள்வோமா...
திசை யானையின் பெயர் அதிபதி
கிழக்கு ஐராவதம் இந்திரன்
தென்கிழக்கு புண்டரீகம் அக்னி
தெற்கு வாமனம் எமன்
தென்மேற்கு குமுதம் நிருதி
மேற்கு புட்பதந்தம் வருணன்
வடமேற்கு சாருவம் வாயு
வடக்கு பூமம் குபேரன்
வடகிழக்கு சுப்ரதீபம் ஈசானன்