Meenakshi Amman Temple

Special supplement · Part 3 · page 63 · 131 / 159

குழந்தை மீனாட்சி விளையாடிய இடம்

மதுரை அரசாளும் மீனாட்சி குழந்தையாக இருக்கும்போது ஓடி ஆடி விளையாடிய இடம்தான் மதுரையில் உள்ள அவனி யாபுரம். இங்குள்ள கோயி லில் பாலமீனாம் பிகை யாக அருள்கிறாள். மலையத்துவஜ பாண் டியனின் மகளாக அவத ரித்தாள் மீனாட்சி. தனது குழந்தைப் பருவத்தில் 'பிள்ளையார் பாளையம்' என்று அழைக்கப்பட்ட இன்றைய அவனியாபுரத் தில் தோழியருடன் விளை யாடி மகிழ்ந்தாள். பருவ வயதில் சுந்த ரேஸ்வரரை மணம் முடித் தாள். அப்போது தோழி கள் ‘எங்கள் ஊருக்கு வந்துவிட்டு செல்லலாம் அல்லவா' எனக்கேட்டனர். இப்படி தோழிகள் கேட்டதால் மணக்கோலத் தில் சுந்தரேஸ்வரருடன் இங்கு எழுந்தருளினாள் மீனாட்சி. இங்கு வந்தால் திருமணத்தடை நீங்கும். குழந்தை வரம் கிட்டும். கோயிலில் தெற்கு நோக்கி அமைந்துள்ள மீனாம்பிகையின் பால எதிரே நந்தி சிலை அமைந் துள்ளதும், கிழக்கு நோக் கியபடி பால சுப்பிரமணி யர் இடப்புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் காட்சி தருவதும் சிறப்பு. தெற்கு நோக்கி ருண விமோசன பைரவர் காட்சி தருகிறார். இவரை வணங்கினால் வழக்கு களில் வெற்றி உண்டா கும். சந்தான விநாயகரை வழிபட்டு வர தாய் பிள் ளைகளுக்கு இடையே பிரச்னை தீரும். இக்கோயில் பாண் டிய மன்னர் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட் டதன் அடையாளமாக தூண்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. சூரிய தீர்த்தம் சர்வ ரோக நிவாரணியாக உள்ளது. கூன் பாண்டியனின் வெப்பு நோய் தீர்க்க திரு ஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தார். அப்போது இங்கே மீனாட்சி அம்மன் பிள் ளத்தமிழ் பாடியதாகவும், இதனாலேயே இவ்விடத் திற்கு பிள்ளையார் பாளை யம் என பெயர் வந்ததாக வும் வயதில் முதிர்ந்தோர் கூறுகின்றனர். முன்பு கோயிலின் உட்பகுதியில் இருந்த பத்திரகாளியம்ம னுக்கு தற்போது வெளியே தனிச்சன்னதி எழுப்பப் பட்டுள்ளது.

எப்படி செல்வது
மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து 6 கி.மீ.,
நேரம்
காலை 6:00 10:00; மாலை 4:00 8:00
தொடர்புக்கு
98437 77721, 97886 87020

விஷேச நாள்: பிரதோஷம், மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை

Advertisement
Top
Advertisement