Meenakshi Amman Temple

Special supplement · Part 3 · page 63 · 132 / 159

யானை எய்த திருவிளையாடல்

காஞ்சிபுரத்தை ஆட்சி செய்த சோழ மன்னன் ஒருவன் பாண்டியநாட்டுடன் போரிட விரும்பினான். அதற்காக சமணர்கள் மூலம் அபிசார வேள்வி ஒன்றை நடத்த மாய யானை இடி போன்ற ஓசையுடன் வெளிப்பட்டது அது பாண்டிய நாட்டை நோக்கி வர தயாராக இருந்தது. அப்போது மதுரை மன்னராக இருந்த விக்ரமபாண்டியன் விஷயத்தை கேள்விப்பட்டான். சிவபக்தி கொண்ட அவன், “சொக்கநாதா! கொடிய யானையிடம் இருந்து நாட்டைக் காத்தருள்க!” என வேண்டினான். “பயம் வேண்டாம்! கீழ்த்திசையில் அட்டாலை மண்டபம் கட்டு” என அசரீரி ஒலித்தது. பாண்டியனும் அவ்வாறே செய்ய, சிவன் வில்லேந்தும் வீரனாகத் தோன்றி நரசிங்க கணையைத் தொடுத்து யானையை வதம் செய்தார். இக்கோலத்தை தரிசித்தால் எதிரி தொல்லை, வீண்பயம் நீங்கும்.

Advertisement
Advertisement
Top
Advertisement