Meenakshi Amman Temple

Special supplement · Part 3 · page 64 · 135 / 159

மீனாட்சியின் தவப்புதல்வர்

1627ல் மதுரையை அடுத்த சமயநல்லூரில் அண்ணாஸ்வாமி சர்மா, திரிபுரசுந்தரி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் மீனாட்சியிடம் மனமுருகி, ‘தாயே. எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை தா. குழந்தை பிறந்ததும், உன் பாதத்தில் விட்டு விடுகிறோம். அதற்கு நீயே தாயாக இரு. எனக்கு குழந்தை பாக்கியத்தை மட்டும் கொடு’ என வேண்டினர். ஒன்றுக்கு இரண்டாக இரட்டை குழந்தைகள் பிறந்தன. பாதங்களில் சங்கு சக்கரத்துடன் உள்ள குழந்தையை வேண்டியபடி மீனாட்சியிடம் ஒப்படைத்தனர். கோயிலுக்குள் வந்த குழந்தைக்கு பாலூட்டி சீராட்டி, உயரிய மந்திரத்தை உபதேசித்து, தாயாக, தந்தையாக, குருவாக இருந்து வளர்த்தாள் மீனாட்சி. கோயிலில் வளர்ந்த குழந்தையை ‘குழந்தைசாமி’ என பக்தர்கள் அழைத்தனர். இவருக்கு 16 வயது இருக்கும் போது பெற்றோர் அம்பாளின் திருவடியை அடைந்தனர். இதன்பின் காசி, கயிலாயம், வத்தலகுண்டு, மதுரை அருகே உள்ள சித்தாலங்குடி, காளவாசல், தென்காசி கன்னி மாரம்மன் கோயில் என பல பகுதிகளுக்கு சென்று பக்தர்களுக்கு அருள்புரிந்தார். ஒருசமயம் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்து, ‘இவர் தான் உண்மையான பரமஹம்சர்’ என போற்றி புகழ்ந்துள்ளார் குழந்தைசாமி.

Advertisement
Advertisement
Top
Advertisement