Special supplement · Part 3 · page 65 · 141 / 159
செல்வம் பெருக...
முருகனின் அம்சமான மன்னர் உக்கிரகுமாரர் மதுரையை ஆண்ட காலத்தில் பஞ்சம் நிலவியது. வருந்திய மன்னர் சிவனை வழிபட்டு நித்திரையில் ஆழ்ந்தார். கனவில் வந்த சிவன்,‘‘ வருந்தாதே! மலைகளுக்கு அரசனான மேருவிடம் செல். ஆணவம் மிக்க அவனைச் செண்டால் அடித்து பணியச் செய். அங்குள்ள சேமநிதியிலுள்ள பொன்னை எடுத்து வந்து மக்களைக் காப்பாற்று’’ எனக் கட்டளையிட்டார். மன்னரும் சிவனை வழிபட்டு தேர் மீதேறி புறப்பட்டார். ‘‘மலைகளில் சிறந்த மேருமலையே...’’ என பலமுறை கூப்பிட்டும் அது வெளிப்படவில்லை. இறுதியில் செண்டாயுதத்தால் தலையில் ஓங்கியடிக்கவே பணிந்தது. ‘‘ மக்களைக் காக்க பொன்னும், பொருளும் வேண்டும். அதற்கான சேமநிதி எங்கிருக்கிறது?’’ எனக் கேட்டார் மன்னர். அருகில் இருந்த குகையை காட்டவே தேவையான பொன்னை எடுத்து வந்து மக்களுக்கு வழங்கினார். நவராத்திரி காலத்தில் சுவாமியை இக்கோலத்தில் தரிசித்தால் செல்வம் பெருகும்.