Meenakshi Amman Temple

Special supplement · Part 3 · page 65 · 142 / 159

வீணை தட்சிணாமூர்த்தி

பிரம்மாவின் மகன்களான சனகாதி முனிவர்கள் ஞானத்தை அடைய குருநாதரை தேடி அலைந்தனர். இதையறிந்த சிவன் தட்சிணாமூர்த்தி கோலத்தில் ஆல மரத்தின் அடியில் தெற்கு நோக்கி காட்சியளித்து விளக்கம் அளித்தார். இறுதியாக சின்முத்திரையைக் காட்டி அமைதி, ஆனந்தம் அடையச் செய்தார். இவரிடம் ஒருமுறை சாமவேதத்தை வீணையில் இசைக்கும் படி நாரதர், சுக்ர முனிவர்கள் வேண்டினர். வீணையை உருவாக்குவது பற்றியும், முறையாக இசைப்பது பற்றியும் வீணா தட்சிணா மூர்த்தியாகிய சிவன் எடுத்துரைத்தார். இக்கோலத்தை தரிசித்தால் இசை ஞானம், புத்தி சாதுர்யம், குறையில்லாத வாழ்வு அமையும்.

Advertisement
Top
Advertisement