Special supplement · Part 3 · page 66 · 144 / 159
பஞ்ச சபை நடராஜர்
மீனாட்சியம்மன் கோயிலில் வெள்ளியம்பல நடராஜர் தவிர பிரகாரத்தில் மேலும் நான்கு சபைகள் உள்ளன. அதாவது, ஒரே கோயிலில் ஐந்து சபைகளும் உள்ளது. திருவாலங்காடு (ரத்தினசபை), சிதம்பரம் (பொற்சபை), திருநெல்வேலி (தாமிரசபை), குற்றாலம் (சித்திரசபை) ஆகிய கோயில்களில் அருளும் நடராஜர் வடிவங்கள் இங்கு உள்ளன. ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரையின்போது இவர்கள் நால்வரும் நூறு கால் மண்டபத்திலுள்ள நடராஜர் சன்னதிக்கு எழுந்தருளுகின்றனர். அவர்களுக்கு ஒரே சமயத்தில் அபிஷேகம் நடக்கும்.