Meenakshi Amman Temple

Special supplement · Part 3 · page 66 · 143 / 159

ஆஹா கல்யாணம்

உலகில் தனித்து சாதனை படைப்பது சிரமமான ஒன்று. அப்படியே சாதித்தாலும் அதனால் பயனேதும் இல்லை. ஒரு செயல் நடக்க இரண்டின் சேர்க்கை அவசியம் என்பதே திருக்கல்யாண தத்துவம். மின்சாரத்தில் பாசிடிவ், நெகடிவ் என்னும் இரு ஆற்றல் உள்ளன. இவை இரண்டும் இணைந்தே ஒளியோ, ஆற்றலோ உண்டாகிறது. இது போலவே, சக்தி, சிவம் இரண்டும் இணைந்தே உயிர்கள் உருவாகின்றன. தேவி இறைவனை விட்டு என்றும் நீங்காத தன்மை கொண்டவள். பாலில் சுவை போலவும், தீயில் சூடு போலவும் கடவுளுடன் இணைந்திருப்பவள். அர்த்தநாரீஸ்வரராக தோன்றி, கடவுளில் சரிபாதி பெற்ற பெருமை படைத்தவள். மலையத்துவஜ பாண்டியனின் மகளாக ‘மீனாட்சி’ என்ற பெயரில் அவதரித்து சொக்கநாதரை கணவராக அடைந்தவள். இந்த இரு சக்திகளும் இணைவதை ‘திருக்கல்யாணம்’ என்ற பெயரில், மனித வாழ்வுக்கேற்ப திருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.

Advertisement
Top
Advertisement