Meenakshi Amman Temple

Special supplement · Part 3 · page 66 · 147 / 159

குபேர வாழ்வு தருபவர்

பிரம்ம தேவனின் வழியில் வந்த புண்ணிய சேனன் என்பவன் ஒரு சிவபக்தன். இவன் செல்வத்திற்கு அதிபதியாவதற்காக அகத்தியரின் ஆலோசனைப்படி, இத்தலத்திற்கு வந்து கடும் தவம் இருந்தான். தவத்தினால் மகிழ்ந்த ஆப்புடையார், சுகந்த குந்தளாம்பிகையுடன் தோன்றி, புண்ணிய சேனனின் விருப்பத்தை நிறைவேற்றினார். இதனால் அகங்காரம் பிடித்து, சிவனின் அருகில் இருந்த அம்பிகையின் அழகில் மயங்கினான். இதனால் இவனுக்கு கண்ணும் போனது, உயிரும் போனது. சுவாமியின் கருணையால் மீண்டும் உயிர்பெற்றான். தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டான். மன்னித்த ஆப்புடையார், இவனை ‘குபேரன்’ என்று அழைத்து மீண்டும் வாழ்வு தந்தார். அன்று முதல் சங்கநிதி, பதுமநிதி என்ற இரு செல்வங்களோடு வடக்கு திசையை காத்து வந்தான். எனவே இத்தலத்திற்கு வந்தால் பணம் சேரும். சுகமான வாழ்வு அமையும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகனிடமும், செல்வ வளம் பெருக வெள்ளிக்கிழமையன்று சிவனுக்கு அர்ச்சனையும் செய்கின்றனர். இத்தலத்தில் ஒரு நெய் விளக்கு ஏற்றினால் 1000 பசு தானம் செய்த பலனும், சுவாமிக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் 100 அஸ்வமேத யாகம் செய்த பலனும் உண்டாகும். திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல்பெற்ற தலமாகும்.

Advertisement
Advertisement
Top
Advertisement