Meenakshi Amman Temple

Special supplement · Part 1 · page 28 · 19 / 159

சுழலும் லிங்கம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்பவர்கள் அங்குள்ள சுழலும் சிவலிங்க ஓவியத்தை பார்ப்பது அவசியம். இந்த லிங்கத்தை எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் அது நம்மை நோக்கியிருப்பது போல இருக்கும். கடவுள் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்ற தத்துவத்தை இது உணர்த்துகிறது. அம்மன் சன்னதியிலிருந்து சுவாமி சன்னதி செல்லும் வழியில் சிவன் சன்னதி 2ம் பிரகாரம் அருகில் கூரையில் இது வரையப்பட்டுள்ளது. பேரொளி மிக்க வட்டத்தின் நடுவில் உள்ள லிங்கத்தின் உச்சியில் தாமரைப்பூ உள்ளது. எந்த திசையிலிருந்து பார்த்தாலும் சிவலிங்கத்தின் ஆவுடை நம்மை நோக்கியது போல இருக்கும்.

Advertisement
Top
Advertisement