Meenakshi Amman Temple

Special supplement · Part 1 · page 28 · 20 / 159

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்

மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் 1645ல் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னரால் உருவாக்கப்பட்டது. இது 305 மீட்டர் நீளம் கொண்ட சதுரமான குளமாகும். அதன் நான்குபுறமும் 12 நீளமானப் படிக்கட்டுகள், நாலாபுறத்திலும் 15 அடி உயர கல் சுவரும் உள்ளன. இதன் நடுவிலுள்ள நீராழி மண்டபம் உள்ளது. சுரங்கக் குழாய்களின் மூலமாக வைகை நதி நீர் தெப்பத்திற்குள் வர இணைப்பு உள்ளது. நாயக்கர் மகால் கட்டுவதற்கு தேவையான மணல் இப்பகுதியில் தோண்டப்பட்டது. மணல் தோண்டியதால் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க எண்ணிய திருமலை நாயக்கர் அப்பகுதியை சதுர வடிவில் வெட்டி, தெப்பக்குளமாக்கி நடுவில் வசந்த மண்டபத்தை கட்டினார். தெப்பம் தோண்டும் போது கிடைத்த விநாயகர் சிலையே, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகர் என்னும் பெயரில் இருக்கிறார். தைப்பூசத்தன்று இங்கு மீனாட்சி அம்மன், சொக்கநாதர் இந்த குளத்தில் தெப்பத்தில் வலம் வருகின்றனர்.

Advertisement
Top
Advertisement