Meenakshi Amman Temple

Special supplement · Part 2 · page 30 · 25 / 159

சனாதனம் பரப்பும் திருமடங்கள்

தமிழகத்திலுள்ள காஞ்சி காமகோடி பீடமும், கர்நாடகாவிலுள்ள சிருங்கேரி சாரதா பீடமும் பிரசித்தியான மடங்களாகும். இவை ஹிந்து நெறியை போற்றவும், சனாதன தர்மத்தை எங்கும் பரப்பவும் ஆதிசங்கர சுவாமிகளால் இப்பாரத தேசத்தில் நிறுவப்பட்ட மடங்களில் முதன்மையானது.

  • இன்றும் பாமரர்கள் முதல் பண்டிதர்கள் வரையிலான அனைவரும் கல்வி, கேள்வி, ஞானம் பெற வேண்டும் என்பதில் முக்கிய ப்பங்கு வகிப்பவை இவை.
  • முன்பு ஹிந்து மதத்திற்கு நெருக்கடி ஏற்பட்ட போது பாரத்தின் தென்பகுதியில் விஜயநகர அரசை நிறுவ வழிகாட்டியவர் வித்யாரண்யர். (1331 – 1386) இவரே சிருங்கேரி மடத்தின் 12 பீடாதிபதியான இருந்து அருளாட்சி செய்தவர்.
  • அதைப்போல தமிழகத்தில் நாஸ்திகர்களால் ஏற்பட்ட அசாதாரண சூழலை தகர்த்தெறிந்து தர்மத்தை நிலை நிறுத்தியவர் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் என்ற மஹா பெரியவர். (1894-1994) இவரே காஞ்சிமடத்தின் 68 வது பீடாதிபதியாக இருந்து அருளாட்சி செய்தவர்.
  • இரு மடத்தின் உயரிய நோக்கங்கள் பல. அவற்றுள் சிலவற்றை சிந்திப்போமாக.
  • சமானிய மக்களுக்கும் புரியும்படியாக ஹிந்து மத தத்துவங்களை எடுத்துச் சொல்லி நடக்க வைத்தல்.
  • நான்கு வேதங்கள், இருபத்து எட்டு ஆகமங்கள், பன்னிரு திருமுறைகள், பதினான்கு சாஸ்திரங்கள், சமயநூல்களை போற்றுதல்.
  • அதன் சாராம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல்.
  • ராமாயணம், மகாபாரதம், புராணம் போன்றவற்றின் உயரிய நோக்கங்களை எடுத்துரைத்தல்.
  • அனைவரையும் ஞானம், தெய்வீக வழியில் தேசத்திற்கு தொண்டாற்ற ஒன்றிணைத்தல்.
  • அறிவில் சிறந்த அவையோர்களை அழைத்து தொடர் சொற்பொழிவு நிகழ்த்துதல்.
  • தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகியவற்றில் புலமை பெற்றவர்களை கொண்டு கருத்தரங்கம் நடத்துதல். அதனை நூலாக்கி வெளியிடுதல்.
  • பொலிவிழந்த கோயில்களுக்கு செல்வந்தரைக் கொண்டு திருப்பணி மேற்கொள்ளுதல்.
  • ‘சர்வே ஜன சுகினோ பவந்து’ என்ற மேன்மையான மந்திரத்தை இமைப்பொழுதும் மறவாமல் உச்சரித்தல். இன்னும் இது போன்ற பல்வேறு பணிகளை செய்வது திருமடங்களின் மேன்மையான செயலாகும். இதனை தமிழ்நாடெங்கிலும் பரப்ப திருவுள்ளம் கொண்டு புனித ஷேத்திரங்களிலும் தனது கிளை மடத்தினை ஸ்தாபித்தார்கள் பீடாதிபதிகள். அந்த வகையில் சங்கஇலக்கியம், புராணம், வரலாறு, பண்பாடு, ஆன்மிகம் ஆகியவற்றில் சிறப்பும் பெருமையும் உடைய மதுரைத் தலத்தில் இருமடத்தின் கிளைகளை ஸ்தாபிக்க திருவுள்ளம் கொண்டார்கள்.
  • அதன்படியே மதுரை சின்ன சொக்கிகுளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் கிளையையும், மீனாட்சியம்மன் கோயில் அம்மன் சன்னதி வீதியிலும், பொன்மேனி – பைபாஸ் ரோட்டிலும் சிருங்கேரி மடத்தின் கிளை மடங்கள் குருநாதர்களின் ஆசியுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
  • இரண்டு மடத்தின் பீடாதிபதிகள் மதுரைக்கு வரும்போது இங்குள்ள கிளைமடத்திற்கு விஜயம் செய்கிறார்கள். அப்போது அன்னை மீனாட்சியம்மனை தரிசனம் செய்து, சத்சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அன்பர்களுக்கு பூரண நல்லாசிகளை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Top
Advertisement