Meenakshi Amman Temple

Special supplement · Part 2 · page 30 · 26 / 159

வெற்றி உமக்கே...

ராஜேந்திர பாண்டியன் காலத்தில் மதுரை மீது காடு வெட்டிய சோழன் போர் தொடுத்தார். “சிவபெருமானே! தீயநோக்கத்துடன் சோழன் படையெடுத்து வருகிறானே” என முறையிட்டார் பாண்டிய மன்னர். ‘கலங்காமல் சோழனுடன் போரிடு. உமக்கே வெற்றி’ என அசரீரி கேட்டது. மன்னரும் நம்பிக்கையுடன் புறப்பட்டார். போரிடும் போது கடும்வெயில் அடிக்கவே வீரர்கள் களைப்புற்றனர். அப்போது அடியவராக வந்து பாண்டிய நாட்டு வீரர்களுக்கு தண்ணீர்ப் பந்தல் அமைத்து தாகம் தணித்தார் மதுரை சிவபெருமான். புத்துணர்வு பெற்ற வீரர்கள் போரிட பாண்டிய மன்னர் வெற்றி பெற்றார். நவராத்திரி விழாவில் சுவாமியின் இந்த கோலத்தை தரிசித்தால் எதிரிபயம் மறையும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

Advertisement
Top
Advertisement