Special supplement · Part 2 · page 31 · 32 / 159
தாயே... நீயே துணை
அம்பிகையின் சன்னதியில் கீழ்க்கண்ட பாடலை பாடுங்கள். நல்லது நடக்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உங்களுக்கு எப்போதும் துணையாக வருவாள் தாய் மீனாட்சி. மாமதுரை அங்கயற்கண் நாயகியே! அம்மையே – துங்க ஒளியே! பெருந்திருவே! ஓதிமமே! உண்மை வெளியே! பரபிரம வித்தே! அளிசேரும் கொந்தளக பந்திக் குயிலே! சிவயோகத் தைந்தருவே! மூவருக்கு அன்னையே! – எந்தமிடர் அல்லல் வினையெல்லாம் அகற்றியே அஞ்சலென்று நல்ல சவுபாக்கியத்தை நல்கியே – வல்ல பத்தி ஆசுமது ரஞ்சித்ர வித்தாரம் என்றறிஞர் பேசுகின்ற உண்மைப் பெருவாக்கு – நேசமுடன் தந்தென்னை ஆட்கொண்டு சற்குருவாய் என்னகத்தில் வந்திருந்து புத்திமதி கொடுத்துச் – சந்ததமும் நீயே துணையாகி நின்றிரட்சி அங்கயற்கண் தாயே சரணம் சரண்.