Meenakshi Amman Temple

Special supplement · Part 2 · page 31 · 33 / 159

கொடிமரத்தில் சம்பந்தர்

சிவன் சன்னதி எதிரேயுள்ள கொடிமரத்தில் விநாயகர், நந்தி உருவங்கள் பொறிக்கப்படுவது வழக்கம். ஆனால் சுந்தரேஸ்வரர் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில் சம்பந்தர் இருக்கிறார். மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னனுக்கு வெப்பு நோய் உண்டானது. அப்போது சிவனை வேண்டி சம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடி, மடப்பள்ளி சாம்பலை கொடுத்து குணமாக்கினார். சமண சமயத்தினருடன் போட்டியிட்டு அவர்களை வென்று மீண்டும் சைவ சமயத்தை நிலைநாட்டினார். இவ்வாறு மதுரையில் சிவ வழிபாடு தழைப்பதற்கு காரணமாக இருந்தார். எனவே இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சுவாமி சன்னதி கொடிமரத்தில் சம்பந்தரை வடித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Top
Advertisement