Special supplement · Part 2 · page 31 · 34 / 159
பெண்ணின் நாணம்
மதுரையை பெண்ணாட்சி தலம் என சொன்னாலும், அன்னை மீனாட்சி பெண்களுக்கே உரித்தான அடக்கத்தோடுதான் (நாணம்) இருக்கிறாள் என்பதை பார்க்க முடியும். எப்படி என்றால்... கோயில் அமைப்பில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். அவள் தன் கணவனை பின்தொடர்ந்து செயல்படுபவளாகவே இருக்கிறாள். இதனை உணர்த்தும் வகையில் அம்பாள் சன்னதி, சிவன் சன்னதிக்கு வலப்புறத்தில் சற்று பின்னால் தள்ளி இருக்கிறது. சுவாமி, அம்பாள் விமானங்களும் முன்னும், பின்னுமாகத்தான் உள்ளது. இந்த அமைப்பை பொற்றாமரைக் குளத்தின் மேற்கு கரையில் இருந்து பார்த்தால் புரியும். இதனால்தான் திருஞானசம்பந்தர், ‘தொடர்ந்து நின்ற என் தாயானே’ என பதிகம் பாடியுள்ளார்.