Special supplement · Part 2 · page 33 · 42 / 159
நக்கீரர் போற்றும் நாயகன்
சங்க காலத்தில் முருகனை போற்றி திருமுருகாற்றுப்படை என்னும் இலக்கியம் படைத்தவர் நக்கீரர். இவர் சொக்கநாதரை புகழ்ந்து ஒரு பாடலை பாடியுள்ளார். இதோ...
வேதமும் நீயே வேள்வியும் நீயே
நீதியும் நீயே நிமலன் நீயே
புண்ணியம் நீயே புனிதன் நீயே
பண்ணியன் நீயே பழம்பொருள் நீயே
ஊழியும் நீயே உலகமும் நீயே
வாழியும் நீயே வரதனும் நீயே
தேவரும் நீயே தீர்த்தமும் நீயே
மூவரும் நீயே முன் நெறி நீயே
மால்வரை நீயே மறி கடல் நீயே
இன்பமும் நீயே துன்பமும் நீயே
தாயும் நீயே தந்தையும் நீயே
விண் முதல் பூதம் ஐந்தவை நீயே
புத்தியும் நீயே முத்தியும் நீயே
சொலற்கு அரும் தன்மைத் தொல்லோய் நீயே
கூடல் ஆலவாய்க்குழகன் ஆவது
அறியாது அரும் தமிழ் பழித்தனன் அடியேன்
ஈண்டிய சிறப்பின் இணை அடிக்கீழ் நின்று
வேண்டும் அது இனி வேண்டுவன் விரைந்தே