Special supplement · Part 2 · page 32 · 41 / 159
ஸ்ரீசக்கர அமைப்பு
மதுரை நகரம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலை மையமாக வைத்து உருவானது. தாமரை மலர் போல வடிக்கப்பட்ட இந்த நகரத்தின் மத்தியில் கோயிலும், சுற்றியுள்ள இதழ்களாக தெருக்களும் அமைந்திருப்பதாக சொல்வர். இங்கு வந்த ஆதிசங்கரர், மீனாட்சி சன்னதியில் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்து பஞ்சரத்னம் பாடினார். அதில் மதுரையை, ‘ஸ்ரீசக்கர அமைப்பில் அமைந்த நகரம்’ என குறிப்பிட்டு பாடியிருக்கிறார். இதை, ‘ஸ்ரீசக்ராங்கித பிந்துமத்ய வஸதீம்’ என்ற ஸ்லோகத்தின் மூலம் அறியலாம். ‘சக்கரத்தின் மத்தியில் அம்பிகை (பிந்து) வசிக்கிறாள்’ என்பது இதன் பொருள். ஆன்மிகத்தில் பிந்து என்ற சொல் அம்பிகையையும், நாதம் என்ற சொல் என்பது சுவாமியையும் குறிக்கும்.