Special supplement · Part 2 · page 38 · 62 / 159
அன்னை மீனாட்சியின் அழகு ஆபரணங்கள்
புராண காலத்தில் ஆண்ட மன்னர்கள் முதல் இக்கால மக்கள் வரை எத்தனையோ பேர் மீனாட்சி அம்மனுக்கு ஆபரணங்களை அணிவித்துள்ளனர். இதுகுறித்து கொஞ்சம் பார்ப்போம். மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரருக்கு 67 உரிய ஆபரணங்களை வழங்கியவர்கள் விபரம் வருமாறு
- முத்துச்சொறுக்கு, முத்து உச்சிக் கொண்டை, முத்து மாம்பழக் கொண்டை, முத்து மேற்கட்டி, முத்து அங்கி, முத்துக்கிளி, முத்துமாலை, முத்துக்கடிவாளம்.
- பட்டாபிஷேகக்கிரீடம், 197 பவுன், அப்பாஜிராயர், மாணிக்கக் கற்கள் 920, வைரகற்கள் 78, மரகதம் 11, நீலம் 7, கோமேதகம் 8.
- ரத்தினச்செங்கோல் 98 பவுன், திருமலை நாயக்கர், சிவப்புக்கல் 761, வைடூரியம் 74. வைரக்கல் 21, மரகதம் 269, முத்து 44.
- காசுமாலை 196 பவுன், மாணிக்கம், முத்து 439, நீலம் 6, கோமேதகம் 2, பவளம் 241.
- முத்து முகலாயர் கிரீடம், 164பவுன், முத்து332, சிவப்புக்கல் 474, பலச்சவைரக்கல் 158, மரகதம் 27.
- கூந்தல் பின்னலில் அணியும் திருமுடிச்சாத்து, 121 பவுன், திருமலை நாயக்கர், செம்பு 324, பலஜாதி வைரம் 114, நீலம் 3, மரகதம் 2, முத்து 694, வைடூரியம் 2.
- தங்கத் தலைக்கூடை, பிட்டுக்கு மண் சுமக்கும்போது அணிவது 122 பவுன். வைரங்கள் 76, சிவப்புக்கல் 342. தங்க மண்வெட்டி, பிட்டுக்கு மண் சுமக்கும்போது அணிவது. 27பவுன்.
- பொட்டுக்காறை (1), 77 பவுன், சிவகங்கை மன்னர் சேதுபதிகாத்த தேவர், மாணிக்கம் 331, மரகதம் 44. பொட்டுக்காறை(3), 67பவுன், ராமநாதபுர அரசர் பாஸ்கர் சேதுபதி, சிவப்புக்கல் 277, பலச்ச வைரம்38, மரகதம் 81
- பவளக்கொடிப் பதக்கம், 16பவுன், மாணிக்கம்64, முத்துக்கள்25.
- பவளத்தாழ் வடம், 6பவுன், செம்பவளம் 28.
- வாகனப்பதக்கங்கள் இரண்டு, நளச்சக்கரவர்த்தி, 93பவுன், மாணிக்கம் 79, நீலம் 18, மரகதம், வைடூரியம், கோமேதகம் 4, மற்றொரு பதக்கம் மாணிக்கம் 83, நீலம் 12, வைடூரியம் 6, மரகதம் 7, கோமேதகம் 3.
- ரோமானியர் தங்கக்காசுமாலை. ரோமானிய எழுந்து பொறித்த 48 காசுகளால் ஆனது. 50 தங்கமணிகளும் இடையிடையே சேர்ந்து இருக்கும்.
- காசுமாலைகள், இங்கிலாந்து கிழக்கிந்திய கம்பெனியால் வழங்கப்பட்டது. ஆங்கிலம் பொறித்த 73 காசுகளால் ஆனது, 9 பவுன். நகரத்தார் காசுமாலை, இரண்டு காசுகளால் ஆனது, 66பவுன்.
- நவரத்தின மிதியடிகள், ரோஸ் பீட்டர்.
- தங்கச் சந்தனக்கும்பா, விஜயரங்க சொக்க நாதர், 71பவுன், தெலுங்கு மொழி பொறிக்கப்பட்டிருக்கும்.
- ஊஞ்சல் உற்ஸவர் சிலைகள், திருமலை நாயக்கர், சுவாமி சிலை, 470 பவுன், அம்மன் சிலை 285 பவுன்.
- நாகர் ஒட்டியாணம், இடையில் அணியும் ஆபரணம்- 18 பவுன் 113 மாணிக்கம், 28 பலச்சவைரம், 8 மரகதம், முத்துக்கள் 66
- நீலநாயக்கப் பதக்கம், திருமலைநாயக்கர், 30பவுன், பெரிய நீலக்கல் 10, கெம்பு 2, கோமேதகம் 1. இங்கிலாந்தில் விக்டோரியா மகாராணியிடம் இந்த நகை யைக் காட்டுவதற்காக அங்கு அனுப்பி வைக்கப்பட்டு மீண்டும் திரும்பிய ஆபரணம்.
- திருமஞ்சனக் கொப்பரை, காட்ச் சகோதரர்கள்(கப்பல் வணிகர்கள்). 35கிலோ வெள்ளியால் ஆனது, கொப்பரையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விபரங்கள் உள்ளன.
- தங்கக் குடங்கள் இரண்டு, நகரத்தார், 1) 2கிலோ 323 கிராம், 2) 2கிலோ 335 கிராம்.
- வைரக்கிரீடம், 1963ல் திருப்பணிக்குழுவினரால் செய்யப்பட்டது, 3500 கிராம், வைரம் 3345, சிவப்புக்கல் 4100, ஒரு பெரிய மாணிக்கக்கல், உயரம் 14.5 அடி, சுற்றளவு 20 அங்குலம்.
- தங்கக்கவசம், வைரக்கிரீடத்தோடு சேர்த்து அணிவது, 1972ல் கோயில் நிதியிலிருந்து செய்யப்பட்டது. 7 கிலோ, இந்தக் கவசம் அணிந்தால் புடவை கட்டியதுபோல தோற்றமளிக்கும்.
- திருக்கல்யாணத்தின் போது விதானத்தில் கட்டும் முத்து மேற்கட்டி, வெல்வெட் துணியில் முத்துக்களால் ஆன யாளி, கிளி, புலி, தாமரை மலர்கள், சூரியகாந்திப்பூ, பறவைகள் ஆகியவை இதில் இடம் பெற்றிருக்கும். 71 ஆயிரத்து 755 முத்துக்களால் ஆனது.
- பட்டாபிஷேகக் கிரீடம், சோமாஸ்கந்தருக்குரியது, சிறிய முத்துக்களால் ஆனது.
- பெரிய முத்துக்களாலான அம்மன் கிளி.