Meenakshi Amman Temple

Special supplement · Part 2 · page 41 · 73 / 159

துவாதசாந்தத் தலம்

உலகம் முழுவதையும் ஒரு மனித வடிவமாக (விராட் புருஷன்) உருவகம் செய்து சொல்லும் மரபு இருக்கிறது. மனித உடலில் ஆறு ஆதார சக்கரங்கள் இருப்பதாக யோக சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அதைப்போல் உலகத்திற்கு (விராட் புருஷனுக்கு) ஆறு ஆதார சக்கரங்களாக ஆறு திருத்தலங்கள் உள்ளன. அவை

மூலாதாரம் - திருவாருர்
சுவாதிஷ்டானம் - திருவானைக்காவல்
மணிப்பூரகம் - திருவண்ணாமலை
அனாகதம் - சிதம்பரம்
விசுத்தி - திருக்காளத்தி
ஆக்ஞை - காசி

இந்த ஆறு ஆதாரங்களையும் கடந்து சகஸ்ரார சக்கரம் என்பது மனிதனின் உச்சந்தலையில் உள்ளது. அதைப்போல் திருக்கயிலாயம் விளங்குகிறது. அந்த சகஸ்ராரத்தையும் கடந்து 12 அங்குல உயரத்தில் உள்ள தலமே மதுரை. இதனால்தான் மதுரை துவாதசாந்தத் தலம் (12) என பெயரை பெற்றுள்ளது.

Advertisement
Top
Advertisement