Special supplement · Part 2 · page 43 · 81 / 159
வைகை நதி
மீனாட்சியம்மனுடைய திருமண விருந்தில் சாப்பிட்ட குண்டோதரனுக்கு தாகம் எடுத்தது. சிவபெருமான் கை வைத்து கங்கை நதியை வரவழைத்தார். அது வைகை நதியாகப் பெருகிப் பாய்ந்தது. இதனை வையை என்கிறது புராணம். வையை என்னும் பொய்யாக்குலக்கொடி என்று சிலப்பதிகாரமும், பரிபாடலில் எட்டுப்பாடல்களும் இதன் பெருமையை போற்றுகிறது. இந்நதியின் சிறப்பை பலரும் புகழ்ந்து கூறியுள்ளனர். இதோ...
- ‘தமிழருமை மதுரை மூதூர் நீரறியும் நெருப்பறியும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, புனல் வாதத்தில் ஈடுபட்டார் திருஞானசம்பந்தர். அவர் ‘வாழ்க அந்தணர்’ எனும் பதிகத்தை பாடி ஏட்டை வைகை நதியில் இட்டார். அப்போது அந்த ஏடு நீரினை எதிர்த்து சென்றது.
- திருவிளையாடல் புராணம் பாடிய பரஞ்ஜோதி முனிவர், வைகை நதியை சிவகங்கை, ஞானதீர்த்தம், வேகவதி என போற்றுகிறார். தீர்த்தன் இதழிச் சடை நின்றும் இழிந்து வரலால் சிவகங்கை தீர்த்தன் உருவந் தெளிவோர்க்கு ஞானந்தரபொற் சிவஞான தீர்த்தம் காலிற்கடு கிவரு செய்தியாலே வேகவதி தீர்த்தம் கிருதமலை யெனவையை நாமஞ் செப்புவரால்
- ‘சங்கத்து இருப்பிலே இருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை’ என்கிறது வில்லிபாரதம்.
- ‘வேகவதிக் கெதிர் ஏறவிட்ட தொருசிற்றேடு காலநதி நினைக்ககரவாக் காரணத்தின் அறிகுறியே’ என மனோண்மணி சுந்தரம் பிள்ளை சொல்கிறார்.
- ‘தமிழ் கண்டதோர் வையை’ என தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியாரும் புகழ்கிறார்.