Special supplement · Part 2 · page 44 · 88 / 159
மதுரைக்கு போயிட்டு வாங்க...
தமிழ்நாட்டின் முதலமைச்சராக காமராஜர் இருந்த காலம் அது. அப்போது ஒருநாள் அரசு அதிகாரிகள் சிலர் அவரை சந்தித்து பேசினர். அப்போது காமராஜர் சொன்ன பதில் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. மதுரையையும் திரும்பி பார்க்க வைத்தது. அப்படி அவர் என்ன சொன்னார் தெரியுமா.... வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள நகர கட்டமைப்பை பார்க்க விரும்பினர். அதைப் பார்த்தால் நமது ஊரை அப்படி மாற்றலாம் என்பதே அவர்களது பார்வை. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்தார் காமராஜர். மேலும் அவர், ‘மதுரைக்குச் சென்று பாருங்கள். அதைவிடவா சிறந்த நகரமைப்பு உலகத்தில் இருக்கப்போகிறது’ என்று கேட்டார். ஆம். உலகத்தில் மற்ற மனிதர்கள் நாடோடிகளாக இருந்த காலத்தில், மதுரையில் நகரை உருவாக்கி ஆட்சி செய்து இருக்கிறார்கள். இப்படி தொன்மையான நாகரிகத்தை தன்னுள் கொண்டது மதுரை.