| | | அருள்மிகு சந்தன கருப்பண்ண சுவாமி திருக்கோயில் | 
 | 
 | 
|  | 
| ![[Image1]](https://imgtemple.dinamalar.com/kovilimages/T_500_1754.jpg)  | 
                                                                                                               |  | 
|  | 
|  | 
| |  |  | |  | மூலவர் | : | சந்தன கருப்பண்ண சுவாமி |  |  | ஊர் | : | கோணூர் |  |  | மாவட்டம் | : | திண்டுக்கல் |  |  | மாநிலம் | : | தமிழ்நாடு | 
 |  |  | 
 | 
           | 
                         
            
            |  | திருவிழா: |  |  
            |  |  |  |  
            |  | சிவராத்திரி |  |  
            |  |  |  |  
            |  | தல சிறப்பு: |  |  
            |  |  |  |  
            |  | தொலைந்த பொருட்கள் கிடைக்க, பில்லி, சூனியம் ஆகியவற்றை போக்குவதற்கும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். |  |  
            |  |  |  |  |  | திறக்கும் நேரம்: |  |  | 
          | |  |  |  |  |  | காலை 9மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். |  |  |  |  |  |  |  | முகவரி: |  |  |  |  |  |  |  | அருள்மிகு சந்தன கருப்பண்ண சுவாமி திருக்கோயில்
கோணூர், திண்டுக்கல். |  |  |  |  |  |  |  |  |  |  |  | பொது தகவல்: |  |  
         |  |  |  |  
          |  | விதை நெல்லை இங்கு வந்து வேண்டிய பிறகு தான் விதைக்கிறார்கள். |  |  
          |  |  |  | 
 | 
 	
    |  | 
         
           | 
                      |  | பிரார்த்தனை |  |  |  |  |  |  |  | தொலைந்த பொருட்கள் கிடைக்க, பில்லி, சூனியம் ஆகியவற்றை போக்குவதற்கும், எதிரி தொல்லை நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள் |  |  |  |  |  |  |  | நேர்த்திக்கடன்: |  |  |  |  |  |  |  | குழந்தைகளுக்கு இங்கு வந்து காது குத்துதல், முதலான சடங்கு சாங்கயங்களைச் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். |  |  |  |  |  |  |  | தலபெருமை: |  |  
                                                  |  |  |  |  
                                                  |  | வீட்டில் எந்தக் காரியத்தைத் துவங்குவதாக இருந்தாலும் சந்தனகருப்பண்ண சுவாமி சன்னதிக்கு வந்து பிரார்த்தனை செய்துவிட்டுதான் காரியத்தில் இறங்குகிறார்கள் பக்தர்கள். அதேபோல், விதை நெல்லை எடுத்துக்கொண்டு இங்கு வந்து வேண்டிய பிறகுதான் வயலில் விதைக்கிறார்கள். விவசாயிகள். குழந்தைகளைப் பள்ளியில் முதன்முதலாகச் சேர்க்கும்போது இங்கு வந்து சூடமேற்றி வேண்டிக் கொள்வதும் நடைபெறுகிறது. |  |  
                                                  |  |  |  |  | 
                                             
                                             | 
          |  | தல வரலாறு: |  |  
  |  |  |  |  
  |  | இந்த ஊருக்கு அருகில் உள்ள அம்மாபட்டி எனும் கிராமத்தில்தான் சந்தனகருப்பண்ண சுவாமி குடிகொண்டு அருள்பாலித்திருக்கிறார் பிறகு அந்த ஊர்மக்களில் சிலர், ஊரைவிட்டு இடம்பெயரும்போது, சுவாமியின் விக்கிரகத்தைத் தங்களுடன் எடுத்துச் சென்றனர். அப்போது வழியில், ஓரிடத்தில் இறக்கி வைத்து, இளைப்பாறினார்கள். சிறிது நேரம் கழித்து, விக்கிரகத்தை எடுக்க முயன்றால்... அசைக்கக் கூடமுடியவில்லையாம். கருப்பண்ண சாமி இங்கே இருக்கணும்னு விரும்புறார் என்று அங்கே இருந்தவர் அருள் வந்து சொல்ல... அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்களாம். மக்கள் அன்றிலிருந்து இன்றளவும் எல்லோரையும் காத்து, சங்கடங்களை அகற்றி சந்தோஷத்தைத் தந்து வருகிறார் சந்தன கருப்பண்ணசுவாமி. |  |  
         |  |  |  |  | 
                                             
                                                                                | 
                                            
                                                                                | 
                                                                                |  | சிறப்பம்சம்: |  |  
  |  |  |  |  
  |  |  |  |  
  |  |  |  |  
  |  |  
  |  |  |  |  |  |  |  
     |  |  |