Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சப்த கன்னியர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு சப்த கன்னியர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சப்த கன்னியர்
  தல விருட்சம்: அழிஞ்சி மரம்
  ஊர்: கன்னிமார்பாளையம்
  மாவட்டம்: திண்டுக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு திருவிழா நடக்கிறது.  
     
 தல சிறப்பு:
     
  சப்தகன்னியருக்கு தனி கோயில் அமைந்திருப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சப்த கன்னியர் திருக்கோயில் வேடசந்தூர், வைரம்பாளையம் கன்னிமார்பாளையம், திண்டுக்கல் மாவட்டம்.  
   
    
 பொது தகவல்:
     
  தமிழ்நாட்டில் சப்தகன்னியர் ஆலயங்கள் பல உள்ளன. அவற்றுள் இங்கு அமைந்துள்ள சப்தகன்னியர் ஆலயமும் ஒன்று.  
     
 
பிரார்த்தனை
    
  நாகதோஷம் உள்ள பெண்கள் இப்புற்றுக்கு பால் ஊற்றி, புதிய ஆடை சாத்தி பிரார்த்தனை செய்தால் அவர்களின் நாக தோஷம் விலகுவதாக நம்புகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  குழந்தைகளுக்கு முடி இறக்குதல், காதுகுத்துதல் என பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

ஆலயத்தின் நுழைவாயிலைத் தொடர்ந்து மகாமண்டபம், அதையடுத்து அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் வடக்குப் பகுதியில் கிழக்கு திசை நோக்கி சூல வடிவில் பெரியசாமி அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள கருவறையில் சப்தகன்னியர் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கின்றனர். ஆலயத்தின் தல விருட்சம் ஆவி எனப்படும் ஒரு வகை மரம். இம்மரம் ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் உள்ளது. இம்மரத்தின் அடியில் விநாயகர் அருள்பாலிக்கிறார். மேற்குப் பிரகாரத்தில் அழிஞ்சி மரம் உள்ளது. ஆதியில் சப்த கன்னியரின் திருமேனிகள் இம்மரத்தின் அடியில்தான் இருந்தன. பின்னரே தனி ஆலயம் அமைத்து கருவறையில் சப்தகன்னியர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த அழிஞ்சி மரத்திற்கு ஊஞ்சல் மரம் என்ற பெயரும் உண்டு. கிழக்குப் பிரகாரத்தில் ஐம்பது ஆண்டுகள் பழமையான மின்னமரம் உள்ளது. இதனடியில் புற்று ஒன்று உள்ளது. இரண்டு நாகதேவதை திருமேனிகளும் உள்ளன.

இந்த ஆலயத்தில் உள்ள சப்த கன்னியர் பலருக்கு குலதெய்வமாக விளங்குகிறாள். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இங்கு திருவிழா நடைபெறுகிறது. சுற்று வட்டார மக்கள் அவர்களின் குழந்தைகளுக்கு முடி இறக்குதல், காதுகுத்துதல் போன்ற சுப காரியங்களை இந்த ஆலயத்தில் நடத்துவது வழக்கம். இங்கு அருள்பாலிக்கும் சப்த கன்னியரை ஆராதனை செய்து வணங்குவதால் தங்கள் குலம் தழைத்து நல்வாழ்வு பெற முடிகிறது என பக்தர்கள் நம்புகின்றனர்.

 
     
  தல வரலாறு:
     
  ஒரு சமயம், வைரம்பாளையத்து ஓடையில் கரையை மூழ்கடிப்பது போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியே இருவர் வேட்டைக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டு இருந்தனர். ஆற்றின் நடுவே வழியில் குறுக்கிட்ட பேழை ஒன்று மிதந்து வருவதை அவர்கள் பார்த்தனர். கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தைப் பார்த்து மிரண்டாலும் ஆர்வம் மிகுதியால் துணிச்சலாக ஆற்றில் இறங்கி பேழையை கரைக்கு எடுத்து வந்து திறந்து பார்த்தனர்.
அதில் மண் பொம்மைகள், அரிவாள், காதோலை, கருகமணி இருந்தன. அவர்கள் அதை ஓடையின் கரையில் வளர்ந்திருந்த மரத்தின் அடியில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். அன்றிரவு, பக்தர் ஒருவரின் கனவில் ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் தோன்றின. கூடவே ஓடையில் மிதந்து வந்தவை சாதாரணப் பொருட்கள் அல்ல; அவை கன்னிமார் தெய்வங்கள். அந்த தெய்வங்களுக்கு ஓர் ஆலயம் கட்டுங்கள் என அசரீரியும் ஒலிக்க, அவர் திடுக்கிட்டு எழுந்தார். தான் கனவில் கண்டதையும் கேட்டதையும் ஊர் மக்களிடம் தெரிவித்தார். பின்னர் அசரீரி வாக்கின்படி ஊர் மக்கள் ஒரு கோயிலை அமைத்து, அங்கு கன்னிமார் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சப்தகன்னியருக்கு தனி கோயில் அமைந்திருப்பது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar