| | | அருள்மிகு பூர்ணை பூஷ்கலை சமேத ஐயப்பன் திருக்கோயில் | 
 | 
 | 
|  | 
| ![[Image1]](https://imgtemple.dinamalar.com/kovilimages/T_500_1758.jpg)  | 
                                                                                                               |  | 
|  | 
|  | 
| |  |  | |  | மூலவர் | : | பூர்ணை பூஷ்கலை சமேத ஐயப்பன் |  |  | அம்மன்/தாயார் | : | பூர்ணை பூஷ்கலை |  |  | ஊர் | : | சின்னப்பா நகர் |  |  | மாவட்டம் | : | புதுக்கோட்டை |  |  | மாநிலம் | : | தமிழ்நாடு | 
 |  |  | 
 | 
           | 
                         
            
            |  | திருவிழா: |  |  
            |  |  |  |  
            |  | கார்த்திகை மாதம் முதல் தை மாதம் வரை இங்கே சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. |  |  
            |  |  |  |  
            |  | தல சிறப்பு: |  |  
            |  |  |  |  
            |  | வேப்பமரமும் அரசமரமும் இணைந்திருக்கும் சிறப்பான ஆலயம். |  |  
            |  |  |  |  |  | திறக்கும் நேரம்: |  |  | 
          | |  |  |  |  |  | காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். |  |  |  |  |  |  |  | முகவரி: |  |  |  |  |  |  |  | அருள்மிகு பூர்ணை பூஷ்கலை சமேத ஐயப்பன் திருக்கோயில்
சின்னப்பா நகர், புதுக்கோட்டை. |  |  |  |  |  |  |  |  |  |  |  | பொது தகவல்: |  |  
         |  |  |  |  
          |  | கன்னிமூலை கணபதி, முருகப்பெருமான், நாகர், மகா மேருவுடன் காட்சி தரும் சபரி துர்கை ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. கார்த்திகை துவங்கியதும் இங்கு வந்து விரதத்தைத் துவக்கி, தினமும் ஐயன் ஐயப்ப ஸ்வாமியை வணங்குகின்றனர் பக்தர்கள். |  |  
          |  |  |  | 
 | 
 	
    |  | 
         
           | 
                      |  | பிரார்த்தனை |  |  |  |  |  |  |  | குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள், சங்கடங்கள் மற்றும் கணவன் மனைவிக்கான பிரச்சனைகள் தீர இங்கு குடும்பத்துடன் பிரார்த்தனை செய்கிறார்கள். |  |  |  |  |  |  |  | நேர்த்திக்கடன்: |  |  |  |  |  |  |  | பிரார்த்தனை நிறைவேறியதும் சபரி துர்கைக்கு மாங்கல்யம் காணிக்கை செலுத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். |  |  |  |  |  |  |  | தலபெருமை: |  |  
                                                  |  |  |  |  
                                                  |  | பூர்ணை மற்றும் புஷ்கலை தேவியுடன் தர்ம சாஸ்தாவாக  ஐயப்ப சுவாமி காட்சி தரும் அழகே அழகு! ஆலய அமைப்பும் பிரகாரமும் கொள்ளை அழகு. இதுபோன்று வேப்பமரமும் அரசமரமும் இணைந்திருக்கும் ஆலயங்களையும் காண்பது அரிது என்பர். |  |  
                                                  |  |  |  |  | 
                                             
                                             | 
          |  | தல வரலாறு: |  |  
  |  |  |  |  
  |  | சுமார் ஆறுபது வருடங்கள் சபரிமலைக்கு விரதமிருந்து ஐயப்பனைத் தரிசித்து வந்த கேசவ பணிக்கர் என்பவர், தள்ளாமையால் மலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட... மனம் நொந்து போனார் அவர். ஒருகட்டத்தில் ஐயப்பனுக்கு புதுக்கோட்டையில் ஓர் ஆலயம் கட்டினால் என்ன எனும் முடிவுக்கு வந்தார். தன்னைப் போலவே ஐயப்பனின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்த டாக்டர் சண்முகசுந்தரத்திடம் இதைத் தெரிவிக்க... அவரும் மனநிறைவுடன் சம்மதித்தார். புதுக்கோட்டை நகரில் அற்புதமாக உருவானது ஐயப்பன் கோயில்.  ஆரம்பத்தில், ஐயப்பனின் விக்கிரகம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டார்களாம். பிறகு சந்நியாசி ஒருவர் இங்கே வந்து, இந்தத் தலத்தில் தம்பதி சமேதராக சாஸ்தா குடியிருந்தால், இன்னும் சுபிட்சம் பெருகும் என்று சொல்லிச் செல்ல... அதன்படி பூர்ணை புஷ்கலை சமேதராக தர்மசாஸ்தாவின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. |  |  
         |  |  |  |  | 
                                             
                                                                                | 
                                            
                                                                                | 
                                                                                |  | சிறப்பம்சம்: |  |  
  |  |  |  |  
  |  | அதிசயத்தின் அடிப்படையில்:
             வேப்பமரமும் அரசமரமும் இணைந்திருக்கும் சிறப்பான ஆலயம். 
 |  |  
  |  |  |  |  
  |  |  
  |  |  |  |  |  |  |  
     |  |  |