கோகுலாஷ்ட்டமி, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தை மாதத்தில் திருவிளக்கு பூஜை
திறக்கும் நேரம்:
காலை முதல் 8..மணி முதல் பகல் 12.00 மணி வரை மாலை4.00 மணி முதல் 7.00 மணி வரை
முகவரி:
அருள்மிகு கல்யாணக்கண்ணன் கோவில்,
சரவணா நகர், கிள்ளை.சிதம்பரம் வட்டம், கடலுார் மாவட்டம், 608102
போன்:
+91 9944746702
பொது தகவல்:
வங்கக்கடலில் இருந்து மேற்கே ஒரு கிலோ மீட் டர் தொலைவில் கோவில் உள்ளது. கிழக்குப் பக்கம் வாயில், விமா னத்தில் ஒரு கலசம், கோவில் வளாகத்தில் துளசி மற்றும் தல விருட்டச மான புன்னை மரம் உள்ளது.
விமானத்தில் ஆறு கரு டஆழ்வார்கள் முகப்பில் சங்கு சக்கர நாமமும், சற் று பின் பக்கம் வெள்ளை பசுவின் மேல் அமர்ந்த நிலையில் கண் ணன் அருள் புரிவது போன் ற சிலைகள் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
புத்திரபாக்கியம், திருமணத்தடை, கால்நடை அபிவி ருத்தி, கல்விக்கடவுளாகவும் வணங்குகின்றனர்.
நேர்த்திக்கடன்:
நெய் தீபம் ஏற்றுதல், தானியங்கள் காணிக்கை
தலபெருமை:
யாதவ் குலத்தினர்களின் குல தெய்வ வழிபாடு நடத்தி வருகின்றனர். சிதம்பரம் நடராஜர், வடக்கே பாபாஜி சுவாமிகோவில், கிழக்கே முழுக்குத்துறைக்கு தீர்த்தவாரியாக வரும் ஸ்ரீ முஷ்னம் பூவரா கசுவாமி வருகையால் கோவிலுக்கு பெருமை.
தல வரலாறு:
கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் குடியேறிய யாதவ் பிள்ளைமார் குடும்பத்தினர்கள் கண்ணன் படத்தை வைத்து, குலதெ ய்வ வழிபாடு நடத்தி வந்தனர். அதன் பின் கோவில் கட்ட இடம் இல்லாததால் மிகவும் பழமையான ஸ்ரீ ஆஞ்சநேயசுவாமி கோவிலில் ஒரு பக்கத்தில் கண்ணனைவைத்து வழிபாடு நடத்திர்.
வெளியூரில் குடி பெயர்ந்தவர்கள் குல தெய்வ வழிபாட்டிற்கு வந்து செ ல்வதுடன் கோவில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்கின் றனர். யாதவ் சமுதாயத்தினர்கள் அல்லாமல் மற்ற சமுகத்தினர்கள் கா ல்நடை அபி விருத்திக்காக கண்ணனை வழிபட்டு வந்தனர். நிரந்தர கோவில் கட்ட தீர்மானித்து அப்பகுதி இளைஞர்கள் வரி வசூ ல் செய்து கோவில் கட்டினர். பால் வளம், பசு வளம் மற்றும் ஆடுகளும் அதிகளவில் பெருக்கடைந்துள்ளதாகவும் கால்நடைகளில் அபிவிருத் திக்காக வழிபாடு தொடர்ந்து நடந்து வருகிறது. பிச்சாவரம் வரும் சுற் றுலாப் பயணிகள் கோவிலில் அர்ச்சனை செய்கின்றனர்.
இருப்பிடம் : கோவிலுக்கு செல்லும் வழி: சிதம்பரத்தில் இருந்து கிள்ளை பேரூந்து நிறுத்தத்தில் இருந்து கிழக்கே 10 பர்லாங் தொலைவில் இயற் கை யான உப்பங்காற்று விசும் மாசி மக தீர்த்த வாரி ஆற்றின் அருகில் கோ வில் உள்ளது.