Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ராமநாதீஸ்வரர்
  அம்மன்/தாயார்: சிவகாமசுந்தரி
  ஊர்: போரூர்
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

- 
     
 திருவிழா:
     
  பிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம்  
     
 தல சிறப்பு:
     
  பெருமாள் கோயில்களில் தான் தீர்த்தம் கொடுத்து சடாரி வைப்பது வழக்கம். சிவனை குருவாக ஏற்று ராமபிரான் வழிபட்டதால், இந்தக் கோயிலில் தீர்த்தம் தந்து, சடாரியும் வைக்கிறார்கள். நவக்கிரகங்கள் அனைத்தும் தமது தேவியருடன் அருள்பாலிப்பது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர், சென்னை.  
   
போன்:
   
  +91 99410 82344 
    
 பொது தகவல்:
     
 

பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, பைரவர், நவக்கிரகம், நால்வர், சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளன.


 
     
 
பிரார்த்தனை
    
 

புத்திரபாக்கியம் கிடைக்கவும், திருமணத்தடையுள்ளவர்களும் இங்குள்ள ராமநாத ஈஸ்வரரை வழிபட்டு பலன் அடைகின்றனர்.


 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் வழிபடுகின்றனர். இங்குள்ள இறைவனுக்கு திராட்சை மாலை சாத்தி வணங்குவது சிறப்பாகும். 
    
 தலபெருமை:
     
 

புத்திர பாக்கிய வழிபாடு: ராமருக்கு குருவாக சிவன் விளங்கிய காரணத்தால் இந்த கோயில் குரு ஸ்தலமாக விளங்குகிறது. வியாழக்கிழமைகளில் குருவுக்கு செய்ய வேண்டிய நிவர்த்தி பூஜை அனைத்தும் சிவனுக்கே நடக்கிறது. மூர்த்திகரமான ராமநாத ஈஸ்வரரை வழிபட்டால் குரு தோஷம் நீங்குவதாக நம்பிக்கையுள்ளது. குழந்தை இல்லாத தம்பதிகள் 48 நாட்கள் விரதமிருந்து வழிபட புத்திரபாக்கியம் கிடைக்கிறது. திருமணத்தடையுள்ளவர்களும் இவ்வாறே இவரை வழிபட்டு வரலாம். இந்த இறைவனுக்கு திராட்சை மாலை சாத்தி வணங்குவது ஸ்பெஷாலிட்டி.


தீர்த்தம், ஜடாரி: பெருமாள் கோயில்களில் தான் தீர்த்தம் கொடுத்து சடாரி வைப்பது வழக்கம். சிவனை குருவாக ஏற்று ராமபிரான் வழிபட்டால், இந்தக் கோயிலில் தீர்த்தம் தந்து, சடாரியும் வைக்கிறார்கள்.


 
     
  தல வரலாறு:
     
 

சிவனுக்கும் சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், சிவனின் திருவிளையாடலால் சக்திதேவி தோல்வி அடைந்தாள். இதன்பின், ஒன்பது கங்கைத் துளிகளாக ஆழ்கடலில் அமிழ்ந்துவிட்டாள். அதனைச் சுற்றி 21 துளிகளாக சக்திக்கு சிவன் தரிசனம் கொடுத்தார். அதில் ஒரு துளி நீர் தரிசனம் தந்த இடமே, கைலாயகிரிபுரம் என்பதாகும் (தற்போதைய ராமேஸ்வரம்). இச்சம்பவத்திற்கு பிறகு, சக்திதேவி தன் அண்ணன் மஹாவிஷ்ணுவிடம், காளிரூபத்தோடு சிவனை அடக்கி ஆளவேண்டும். பின்னர் சிவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும், என்பதே அந்த வரம். அவ்வாறே ஆகட்டும் என்ற விஷ்ணு, சிவன் காஞ்சிபுரத்தில் லிங்கவடிவில் இருப்பதாகவும், அங்கு போய் அவரை அடக்கியாளலாம், என்றும் சொன்னார்.


சக்தி அங்கு சென்றதும், மாயவனின் லீலையால் காஞ்சிபுரம் முழுவதுமே லிங்கமயமாக இருந்தது. உண்மையான சிவன் யார் என்று தெரியாமல் சக்தி திணறினாள். அவளது கோபம் அதிகமானது. தான் கணவரை பிரிந்து வாடுவது போல், தன் அண்ணன் விஷ்ணுவும், ராம அவதாரம் எடுத்து மனைவியாகிய சீதையை பிரிந்து துன்புற வேண்டும். பின்னர் சிவனை வழிபட்டு சீதையை அடைய வேண்டுமென்று சாபம் கொடுத்தாள். இந்த சாபத்தின் படி, விஷ்ணு ராமாவதாரத்தின் போது சீதையைப் பிரிந்தார். அவளை தேடிச்சென்ற ராமன், இலுப்பைக்காடு சூழ்ந்த போரூர் என்னுமிடத்தில் ஒரு நெல்லி மரத்தடியில் அமர்ந்தார். பூமிக்கடியில் லிங்கம் இருப்பதை அறிந்து, அதை வெளிக் கொண்டு வர 48 நாட்கள் தவம் செய்தார். அத்தவத்தால் மகிழ்ந்த சிவன் பூமியை பிளந்து கொண்டு லிங்க வடிவில் வந்தார். ராமன் லிங்கத்தைக் கட்டி அணைத்து அமிர்தலிங்கமாக மாற்றினார். இந்த சிவனுக்கு ராமநாத ஈஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள அம்பிகை சிவகாமசுந்தரி என்ற பெயரில் காட்சி தருகிறாள். இங்கு தரப்படும் நெல்லிக்காயை பிரசாதமாகப் பெற்று சாப்பிடுபவர்கள் ஆயுள்விருத்தியுடன் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar