Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: விஜயநாதகேஸ்வரர்
  அம்மன்/தாயார்: விஜயநாயகி
  ஊர்: சின்னாண்டி
  மாவட்டம்: சென்னை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சியின் போது சிறப்பு பரிகார பூஜைகள், மகாசிவராத்திரி விழா, ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், காலபைரவாஷ்டமி, கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம், புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் எனப் பல்வேறு விசேஷங்கள் நடைபெறுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  அக்னி மூலையில் நவகிரக சன்னதி அமைந்திருப்பதும், அதில் குருபகவான், விஜயநாயகி அம்மனை நோக்கியவாறு காட்சி தருவதும் சிறப்பாகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி, சென்னை.  
   
    
 பொது தகவல்:
     
  மூலவரின் கோஷ்டத்தில் நர்த்தனகணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை அருள்கின்றனர். பிராகாரம் வலம் வருகையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள், வள்ளி-தெய்வானை சமேத முருகன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் தரிசனம் தருகிறார்கள்.  
     
 
பிரார்த்தனை
    
  ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் விஜயநாதகேஸ்வரரை மனமுருகி வழிபட்டால் அவர்களது ஆரோக்கியம் மேம்படுகிறது. குறிப்பாக இதயக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பலர் இவரை வணங்கி நற்பலன் பெற்றுள்ளனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  கோயில் நுழைவு வாயிலின் முகப்பில் ரிஷப வாகனத்தில் அமர்ந்த நிலையில் சுவாமியும் அம்பாளும்; அவர்களுக்கு இருபுறமும் விநாயகரும், முருகனும் காட்சி தருகின்றனர். முன்மண்டபத்தில் பலிபீடம், நந்திகேஸ்வரரும், அர்த்த மண்டபத்தின் இருபுறமும் விநாயகப் பெருமானும், முருகப்பெருமானும் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் மற்றும் நடராஜர் - சிவகாமி அம்மையாரின் உற்சவ விக்ரகங்கள் இடம் பெற்றுள்ளன. அதையடுத்து கருங்கல்லாலான கருவறையின் உள்ளே மூலவர் விஜயநாதகேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இவ்வாலயத்தின் இறைவி விஜயநாயகி அம்மன் தனிச் சன்னதியில் தெற்கு நோக்கி தரிசனம் அளிக்கிறாள். அவளுக்கு முன்பாக பலிபீடமும் சிம்மவாகனமும் உள்ளன. கோஷ்டத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி அருள்கின்றனர். அக்னி மூலையில் நவகிரக சன்னதி அமைந்துள்ளது. அதில் குருபகவான், விஜயநாயகி அம்மனை நோக்கியவாறு காட்சி தருவது தனிச் சிறப்பாகும். ஈசான்ய மூலையில் கால பைரவருக்கும் தனிச் சன்னதி உள்ளது.  
     
  தல வரலாறு:
     
  சென்னை, கவிஞர் கண்ணதாசன் நகருக்கு, அருகில் அமைந்துள்ள சின்னாண்டி மடம் ஒரு காலத்தில் தென்னந்தோப்பு, வயல்கள் சூழ்ந்த அழகிய கிராமம். ஊரின் பெயர்க் காரணத்தைக் கேட்டால், அக்காலத்தில் சிவனடியார்கள் அதிகம் பேர் இப்பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும்; அதனால் சிவனாண்டி மடம் என அழைக்கப்பட்டு பின்னர் சின்னாண்டி மடம் என மருவியது. சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் இங்கு புதர் மண்டிக்கிடந்த இடத்தில் பூமியில் பாதி புதையுண்ட நிலையில் மூலவர் விஜயநாதகேஸ்வரரும், நந்தியும் கண்டெடுக்கப்பட்டது. ஆகம விதிப்படி ஆலயம் அமைக்கப்பட்டு அதன்பின் மற்ற சன்னதிகளும் ஏற்படுத்தப்பட்டன.  
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: அக்னி மூலையில் நவகிரக சன்னதி அமைந்திருப்பதும், அதில் குருபகவான், விஜயநாயகி அம்மனை நோக்கியவாறு காட்சி தருவதும் சிறப்பாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar