|
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
காசி விஸ்வநாதர் |
|
அம்மன்/தாயார் | : |
காசி விசாலாட்சி |
|
ஊர் | : |
வசப்புத்தூர் |
|
மாவட்டம் | : |
கடலூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
பிரதோஷம், சிவராத்திரி |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செல்பவர்கள் இந்த சிவனையும் வழிபாடு செய்தால் தான் முழுப்பலன் என்பது சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்,
வசப்புத்தூர், கடலூர் மாவட்டம். |
|
| | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தியும், கோஷ்டத்தில் சண்டிகேஸ்வரரும், துர்கையும் உள்ளனர். |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
புத்திர தோஷமும், பித்ரு சாபமும் விலக இங்குள்ள இறைவனை வேண்டிக் கொள்கிறார்கள். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள அம்மனை வழிபாடு செய்கின்றனர். | |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். | | |
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
கருவறையில் ஈசன் சிறிய பாணலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். சனகாதி முனிவர்களோடு உலக மக்களுக்கும் ஞான உபதேசம் செய்யும் பொருட்டு எல்லாம் வல்ல எம்பெருமான் குருவடிவம் பெற்று தட்சிணாமூர்த்தியாக சின் முத்திரையுடன் காட்சியளிக்கிறார். |
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
முன்காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தென்பகுதியிலிருந்து வருபவர்கள் சற்று இளைப்பாறி, குளித்து தெம்பாக வருவதற்கு ஒரு கோயிலில் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். நாளடைவில் அங்கு காசிவிஸ்வநாதரும், விசாலாட்சியும் அருளாட்சி செய்வதைக்கண்டு, முதலில் இவர்களை வழிபட்டு பின் சிதம்பரம் நடராஜரை வழிபட்டால் முழுபலன் கிடைக்கும் என நம்பினர். பின்னர் இத்தல விஸ்வநாதரை வழிபட்டால் காசியில் உள்ள விஸ்வநாதர், விசாலாட்சியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும், என்பதை உணர்ந்தனர். இக்கோயில் சோழர்கள் காலத்தில் கட்டபட்டிருக்க வேண்டும். அத்தனை அழகு நிறைந்த இந்த கோயில் முழுவதும் கருங்கல் திருப்பணி. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செல்பவர்கள் இந்த சிவனையும் வழிபாடு செய்வது சிறப்பு.
|
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செல்பவர்கள் இந்த சிவனையும் வழிபாடு செய்தால் தான் முழுப்பலன் என்பது சிறப்பு.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|