Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஜமதக்னீஸ்வரர்
  அம்மன்/தாயார்: அமிர்தாம்பிகை
  தல விருட்சம்: வில்வம்
  தீர்த்தம்: அக்னி தீர்த்தம்
  ஊர்: உடையவர் தீயனூர்
  மாவட்டம்: அரியலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பிரதோஷம், சிவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  மூலவர் ஜமதக்னீஸ்வரர் கருங்கல்லால் ஆன சதுரவடிவில் அமைந்த பலகை போன்ற பீடத்தின்மேல் சிவலிங்கத் திருமேனியராகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில், உடையவர் தீயனூர், அரியலூர் மாவட்டம்  
   
    
 பொது தகவல்:
     
  விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் மற்றும் கோஷ்ட நாயகர்கள் காணப்படுகின்றனர்.  
     
 
பிரார்த்தனை
    
  வயிற்றுவலி, கண்நோய், சூலை நோய் போன்ற பல்வேறு நோய்களிலிருந்து விடுபட இங்குள்ள மூலவரை வணங்கி செல்கின்றனர். மேலும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், நவகிரக தோஷங்கள் நீங்கவும் இங்கு வழிபடுகின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  அன்னை அமிர்தாம்பிகை சன்னதியின் விமானம் கூம்புவடிவ அமைப்பில் உள்ளது. தலையில் அழகிய கரண்ட மகுடம் அலங்கரிக்க, இரண்டு காதுகளிலும் பத்ர, மகர குண்டலங்கள், கழுத்தில் அழகிய தாலி, கைகளில் வளையல், கால்களில் சதங்கை என அணிமணிகள், மேல் வலது கையில் அட்சமாலை, இடது கையில் நீலோற்பவ மலர், முன் வலக்கையை அபயமுத்திரையுடனும், இடக்கையை தொடையில் ஊன்றியவாரும் அம்மன் காட்சி தருகிறார்.  
     
  தல வரலாறு:
     
  இரண்டாம் ராஜராஜன் காலத்தில் கற்றளியாக கி.பி. 1166ல் கட்டப்பெற்ற பழமையுடையது. இவ்வூரின் தொன்மையான பெயர் தீயனூர். இவ்வூருக்கு மனுகுலகேசரி நல்லூர் என்ற பெயர் இருந்ததாக, கங்கை கொண்ட சோழபுரத்தில் எழுதப்பட்ட முதலாம் ராஜாதிராஜன் கல்வெட்டு சொல்கிறது. தற்போது உடையவர் தீயனூர், பெருமாள் தீயனூர் என்னும் இரண்டு சிற்றூர்கள் உள்ளன. சிவன் கோயில் அமைந்த பகுதி உடையவர் தீயனூர்; விஷ்ணு கோயில் அமைந்துள்ள பகுதி பெருமாள் தீயனூர்.

வெப்பம் மிகுந்த பிரதேசமாதலால் தீயனூர் என்றழைக்கப்பட்டது. புராண காலத்தில் இப்பகுதி வில்வ மரங்கள் நிறைந்த வனப்பிரதேசமாக இருந்தமையால் வில்வாரண்யம் என்று அழைக்கப்பட்டது. இந்த வனத்தில் சப்தரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர் சிவபெருமானை நோக்கி தவம் செய்வதற்காக இங்கு வந்து தங்கி வில்வ மரத்தின் கீழ் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அந்த லிங்க மூர்த்தமே, ஜமதக்னீஸ்வரர் ஆனது. (அக்னி வழிபட்டதால் அக்னீஸ்வரர் என்ற திருப்பெயரும் உண்டு.)

திருக்கோயிலை ஒட்டியுள்ள தீர்த்தக்குளம் அக்னி தீர்த்தமாகவும், இங்கு ஓடும் மருதையாறு, புண்ணிய தீர்த்தமாகவும் திகழ்கிறது. ஜமதக்னியின் அறிவுரைப்படி பரசுராமர் தன் தாய் ரேணுகாதேவியைக் கொன்ற தோஷம் நீங்க, பழுவூருக்கு வடக்கில் ஓடும் மருதை ஆற்றில்தான் நாள்தோறும் தீர்த்தமாடி ஈசனை வழிபட்டு வந்தார். எனவே, இந்த நதி பரசுராம நதி என்ற சிறப்புப் பெயராலும் அறியப்படுகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் ஜமதக்னீஸ்வரர் கருங்கல்லால் ஆன சதுரவடிவில் அமைந்த பலகை போன்ற பீடத்தின்மேல் சிவலிங்கத் திருமேனியராகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar