Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு க்ஷீரராம லிங்கேஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு க்ஷீரராம லிங்கேஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: க்ஷீரராம லிங்கேஸ்வரர், திரக்ஷராமர், திரக்ஷõராமா
  அம்மன்/தாயார்: மாணிக்காம்பாள்
  புராண பெயர்: திராக்ஷõராமா
  ஊர்: பாலக்கொல்லு
  மாவட்டம்: கிழக்கு கோதாவரி
  மாநிலம்: ஆந்திர பிரதேசம்
 
 திருவிழா:
     
  பிரதோஷம், சிவராத்திரி, நவராத்திரி  
     
 தல சிறப்பு:
     
  இங்குள்ள லிங்கம் பளிங்கு கல்லால் ஆனது. இந்த லிங்கத்தின் பின்புறம் மூன்று கோடுகள் உள்ளதாகவும் இதற்கு ஜடாமகுடம் தரித்து அலங்கரிப்பர் என்பதும் சிறப்பு. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மாணிக்க சக்தி பீடம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு க்ஷீர ராம லிங்கேச்வரசுவாமி திருக்கோயில் பாலக்கொல்லு, கிழக்கு கோதாவரி மாவட்டம் ஆந்திரப்பிரதேசம்.  
   
    
 பொது தகவல்:
     
  கர்ப்பகிரகத்தில் கறுப்பு கற்களாலான 27 தூண்கள் உள்ளன. மூலவரான ராமலிங்கேச்வர சுவாமிக்கு இடப்புறம் தனித்தனி சன்னதியில் கோதர்னேச்வரரும், விக்னேச்வரரும் அருள்பாலிக்கின்றனர். மூலவருக்கு வலப்புறம் தனித்தனி சன்னதியில் சுப்ரமணிய சுவாமியும், ஜனார்த்தன சுவாமியும் உள்ளனர். கர்ப்பகிரகத்தின் நான்குபுறமும் உள்ள நான்கு ஜன்னல்கள் மூலம் மூலவரைக் காணலாம். மேலும் பார்வதி, லட்சுமி, நாரேச்வரலிங்கம், துண்டி விநாயகர், வீரபத்ரர், சப்தமாதர்கள், கனக துர்கா, பிரம்மா, சரஸ்வதி, குமாரசுவாமி, மகிஷாசுரமர்த்தினி, நடராஜர், தத்தாத்ரேயர், காலபைரவர், சனீஸ்வரர், ராதா கிருஷ்ணர் ஆகியோரையும் தரிசனம் செய்யலாம்.  
     
 
பிரார்த்தனை
    
  பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள சிவனை வழிபாடு செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
 

இந்தக் கோயிலில் உள்ள லிங்கம் மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாகும். கிழக்கு கோபுரம் 120 அடி உயரமுள்ளது. 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோபுரம். இதில் உள்ள பழமை வாய்ந்த சிவலிங்கம் திரேதாயுகத்தில் ராமபிரானால் வழிபடப்பட்டது. எனவே இதை ராமலிங்கேச்வர சுவாமி என்றும், க்ஷீர ராமேஸ்வர சவாமி என்றும் அழைப்பர்.

இந்தக் கோயிலில் ஒரு நாள் முழுவதும் தங்கி ராமலிங்கேச்வரரை வழிபட்டால், காசியில் ஒரு வருடம் தங்கியதற்கு சமம். கோயில் பிரகாரம் ஸ்ரீவேலுபதி என்பவரால் 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

 
     
  தல வரலாறு:
     
 

தாரகாசுரனை குமாரசுவாமி கொன்று அவன் தொண்டைப் பகுதியில் கட்டியிருந்த லிங்கத்தை உடைத்தவுடன் அது ஐந்து பகுதிகளாக தெறித்து ஐந்து இடங்களில் விழுந்தது. அப்படி விழுந்த லிங்கங்களில் இதுவும் ஒன்று.

சப்த மகரிஷிகளில் ஒருவரான கவுசிக மகரிஷியின் மகன் உபமன்யு இங்கு சிவ வழிபாடு செய்து வந்தான். வழிபாட்டின் ஒரு அம்சமான பால் அபிஷேகத்துக்கு இந்தப் பகுதியில் தேவையான பால் கிடைக்கவில்லை. எனவே உபமன்யு அதற்கும் சிவபெருமானை வேண்ட அவர் தன்கையில் இருந்த திரிசூலத்தால் ஒரு பெரிய பள்ளத்தை தோண்ட, அதில் பாற்கடலில் இருந்து பால் வந்து நிரம்பியது. இதனால் உபமன்யுவின் கோரிக்கை மட்டும் நிறைவேறியதோடு மட்டுமில்லாமல் இந்தப் பகுதியில் வசித்து வந்தவர்களுக்கு தங்குதடையின்றி நிரந்தமாக பால் கிடைக்க வழியேற்பட்டது. எனவே இந்த ஊர் ஆதியில் பாலகோடா என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் பாலக்கொல்லு என்றழைக்கப்படலாயிற்று.

 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள லிங்கம் பளிங்கு கல்லால் ஆனது. இந்த லிங்கத்தின் பின்புறம் மூன்று கோடுகள் உள்ளதாகவும் இதற்கு ஜடாமகுடம் தரித்து அலங்கரிப்பர் என்பதும் சிறப்பு. அம்மனின் சக்திபீடங்களில் இது மாணிக்க பீடமாகும்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar