Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
  அம்மன்/தாயார்: வள்ளி தெய்வானை
  தீர்த்தம்: திருக்குளம்
  ஊர்: காட்டினாயனப்பள்ளி
  மாவட்டம்: கிருஷ்ணகிரி
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சைவ, வைணவ பேதமின்றி திகழும் ஆடிக்கிருத்திகையும் தைப்பூசமும் பெரு விழாக்களாகும். 14 நாட்கள் நடைபெறும் தைப் பூச விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடிப் பாடி வந்து ஆறுமுகனின் அருளைப் பெறுவது பக்தி பரவசமூட்டும் காட்சி. முக்கிய நாட்களில் முருகப் பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி உலா வருவார்.  
     
 தல சிறப்பு:
     
  சைவ, வைணவ பேதமின்றி திகழும் ஆலயம்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் காட்டினாயனப்பள்ளி கிருஷ்ணகிரி.  
   
போன்:
   
  +91 4343 292764 
    
 பொது தகவல்:
     
  பிரதான மூர்த்தியாக வள்ளி-தெய்வானை சமேதராகக் சுப்பிரமணியசுவாமி விளங்க, அவருக்கு அருகிலேயே ஆனைமுகனும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாளும், ஆஞ்சநேயரும் தனித்தனி சன்னதிகளில் அருள்கின்றனர். அவர்களுக்கு உற்சவ மூர்த்தங்களும் உண்டு.
 
     
 
பிரார்த்தனை
    
  இங்கு வள்ளி தெய்வானை சமேதராக அருளும் சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டவர்களுக்கு சகல தோஷங்களும் விலகி சந்தோஷமான வாழ்வு அமைந்திருக்கிறது. குறிப்பாக பல கல்யாணங்கள் இவரது அருளால் கைகூடியிருக்கிறது. கோயிலைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலர் தங்கள் மகனுக்கோ மகளுக்கோ திருமணத்தை இத்தலத்திலேயே நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  சுவாமிக்கு பால் குடம் எடுத்து காவடி சுமந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  விசாலமான முன் மண்டபத்தில் கொடிமரம் கம்பீரமாக காட்சி தருகிறது. இந்த ஆலயத்தையொட்டி மலை மீது ஆஞ்சநேயர் அருள்கிறார். அவரை தரிசிக்க எழுநூறு படிகள் ஏறிச்செல்ல வேண்டும். சற்று கடினமான பயணம்தான். தினசரி வழிபாடு கிடையாது. படியேறும் வழியில் சாது சாமியின் ஜீவசமாதி உள்ளது. அதன் மேல் அவரது திருவுருவம் அமைக்கப்பட்டு வழிப்படப்பட்டு வருகிறது. தினசரி ஒரு கால பூஜை நடைபெறும் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு மேற்கே நீராழி மண்டபத்துடன் கூடிய திருக்குளம் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இக்கோயிலில் தினசரி அன்னதானத் திட்டம் செயல்பட்டு வருகிறது.
 
     
  தல வரலாறு:
     
  ஆறுமுகன் குடிகொண்டுள்ள இத்தலத்தில் பல வருடங்களுக்கு முன்பு பக்தர் ஒருவர் ஆஞ்சநேயர் சிலை வைத்து வழிபட்டு வந்துள்ளார், அப்போது அங்கு வந்த சாது சாமி என்ற மகான். முருகப்பெருமான் அருட்கடாட்சம் நிறைந்துள்ள இந்த இடத்தில் அவனுக்கு ஆலயம் எழுப்புங்கள். ஊர் மக்களையும், தன்னை வழிபட வருவோரையும் அவன் காத்தருள்வான்! என்று கூறியிருக்கிறார். அவரது அருளுரையின்படி பக்தர்களின் பங்களிப்போடு கோயில் கட்டப்பட்டது. இயற்கையான சூழலில் அமைந்த ஆலயம்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சைவ, வைணவ பேதமின்றி திகழும் ஆலயம்.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar