விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம், சங்கடஹர சதுர்த்தி
தல சிறப்பு:
ஒரே கோயிலில் இரண்டு பிள்ளையார் காட்சியளிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு இரட்டை பிள்ளையார் திருக்கோயில்
இரட்டை பிள்ளையார் கோயில் தெரு
புதுப்பாளையம், கடலூர்-607001.
போன்:
+91 4142-295115, 99408 63430
பொது தகவல்:
பிரகாரத்தில் விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், சுப்ரமணியர், நவக்கிரக சன்னதிகள் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்கள்.
பிரார்த்தனை
சகல தோஷங்கள் நீங்கி ஐஸ்வர்யங்கள் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
தேங்காய் மாலை சார்தியும், கொழுகட்டை வைத்து அர்ச்சனை செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
விநாயகர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோயிலின் ராஜகோபுரம் மூன்று நிலைகள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இரட்டை பிள்ளையார் கொண்ட கோயில் கடலூர் நகரில் வேறு எங்கும் கிடையாது.
தல வரலாறு:
ஆரம்ப காலத்தில், இக்கோயில் முட்காடுகளுக்கு நடுவில் அமைந்திருந்தது. அப்போது, இங்குள்ள விநாயகரை தரிசித்த முனிவர் ஒருவர், விநாயகர் இரண்டும் ஒன்றாக இருக்கக் கூடாது; ஒரு கோயில் கட்டி ஒரு விநாயகரை கோயில் கருவறையிலும், மற்றொரு விநாயகரை அர்த்த மண்டபத்திலும் வைக்க வேண்டும், அவ்வாறு செய்தால், ஊர் விருத்தியடையும் எனக்கூறிச் சென்று விட்டார்.முனிவர் கூறியபடி, ஒரு விநாயகர், கோயில் கறைவறையிலும், மற்றொரு விநாயகர் அர்த்த மண்டபத்தின் தென் பாகத்திலும் பிரதிஷ்டை செய்து, வணங்கியதால் இக்கோயில் இரட்டை பிள்ளையார் கோயில் என, பெயர் பெற்றது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ஒரே கோயிலில் இரண்டு பிள்ளையார் காட்சியளிப்பது சிறப்பு.