கார்த்திகை முதல் தேதி முதல் தை மாதம் வரை தினந்தோறும், மாலை 6:30 மணி முதல் 7:45 மணி வரை பஜனை, அன்னதானம் நடக்கிறது. தை மாதம் 10 ம் தேதி, இந்த கோயிலில் லட்டு திருவிழா, வருஷாபிஷேகம், 200 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெறும்.
தல சிறப்பு:
சபரிமலையில் மகரஜோதி வழிபாடு நடத்துவது போல், இங்கும் அக்னி மூலையில், ஜோதி வழிபாடு நடத்தப்படும் என்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்,
தேனி.
போன்:
+91 94424 85799.
பொது தகவல்:
இங்கு அர்த்த மண்டபம், மகா மண்டபம், அன்னதான மண்டபம், என உள்ளது.
பிரார்த்தனை
தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற பக்தர்கள் இங்குள்ள ஐயப்பனை மனதார பிரார்த்தித்துச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் இங்கு இலவசமாக தங்கி ஓய்வெடுத்து, உணவருந்தி செல்கின்றனர். கோயில் குருநாதர் பிரம்மச்சாரி ரவி சாமி, இனி நம்மிடம்...30 குருநாதர்கள், ஆண்டு தோறும் 48 மைல் நடந்து பெரும்பாதை வழியாக சபரிமலை சென்று வருகின்றனர். சபரிமலையில் மகரஜோதி வழிபாடு நடத்துவது போல், இங்கும் அக்னி மூலையில், ஜோதி வழிபாடு நடத்தப்படும். டிசம்பர் 31ல் இரவு, சிறப்பு பஜனை வழிபாடு நடத்தி நள்ளிரவு 12:01 மணி முதல், பக்தர்கள் எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ, பூஜை செய்யப்பட்ட நாணயம் வழங்குகிறோம். தை மாதம் 10 ம் தேதி, இந்த கோயிலில் லட்டு திருவிழா, வருஷாபிஷேகம், 200 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெறும். கடந்த 25 ஆண்டுகளாக, பக்தர்களை காசி யாத்திரை அழைத்து செல்கிறோம். பழநி பாத யாத்திரை, திருச்செந்தூருக்கு சைக்கிள் பயணம், என ஆண்டு முழுவதும் ஆன்மிக பயணமும், வழிகாட்டுதலும், இங்கு சேவை மனப்பான்மையுடன் தொடர்கிறது, என்றார்.
தல வரலாறு:
தேனி பங்களா மேட்டில் சுவாமி ஐயப்பனுக்கு தனிக்கோயில் உள்ளது. இங்கு கோயிலோடு சேர்த்து, ஆண்டு முழுவதும், ஆன்மிக சேவையும் நடக்கிறது. தேனியில் ஆண்டு தோறும் ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் குழுவினரால், 1997 ம் ஆண்டு கும்பாபிஷேகத்துடன் கோயில் உதயமானது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சபரிமலையில் மகரஜோதி வழிபாடு நடத்துவது போல், இங்கும் அக்னி மூலையில், ஜோதி வழிபாடு நடத்தப்படும் என்பது சிறப்பு.