ஆதிசக்தீஸ்வரர் சுயம்புவாகத் தோன்றிய இடத்தில் தற்போது ஒரு விநாயகர் கோயில் உள்ளது. அதன் அருகிலேயே திருக்கோயிலின் புஷ்கரிணி உள்ளது.
பிரார்த்தனை
தோல் நோய் பக்தர்கள், தீர்த்த குளத்தில் குளித்து சுவாமியை வழிபட வேண்டும், சசிவர்ணர் - நந்திபாராயணர் குஷ்ட நோய் குணமடைய வேண்டி தீர்த்தகுளத்தில் குளித்து வழிபட்ட பின், ஜீவசமாதி அடைந்ததாக கூற்று உள்ளது.
நந்திபாராயணர் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வேண்டினால் நமது வியாதிகள் தீரும்; உடல் நலம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, நந்திபாராயணரையும் ஆதிசக்தீஸ்வரி சமேத ஆதிசக்தீஸ்வரரையும் தரிசித்தால், பிரச்சனைகள் நிச்சயம் தீரும் என்கிறார்கள் பலன் பெற்றவர்கள்.
ஆதிசக்தீஸ்வரர், மரங்கள் நிறைந்த வனப்பகுதியில் புற்றிலிருந்து சுயம்புவாகத் தோன்றியவர். ஆதிசக்தீஸ்வரி என்பது அன்னையின் நாமம். ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட பழைமை வாய்ந்த கோயில்.
தலபெருமை:
ஒருசமயம் சசிவர்ணர் என்ற அந்தணர் மது அருந்துதல், மாமிசம் புசித்தல் போன்ற தீய செயல்களில் ஈடுபட்டதால், அவரது உருவம் உருக்குலைந்ததுடன், கைஇழந்தும் வாழ்ந்து வந்தார். நந்திபாராயண சித்திரைக் கேள்விப்பட்ட சசிவர்ணர், அவரிடம் சரணடைந்து தன்னைக் காக்க வேண்டினார். நந்திபாராயணர் கூறியபடி திருக்குளத்தில் மூழ்கி எழுந்ததும் போலவே மாறியது. அவரும் ஆதிசக்தீஸ்வரரிடம் அன்பு பூண்டு வாழ்ந்தார். இந்த இருவருக்கும் ஆதிசக்தீஸ்வரர் காட்சி தந்து மோட்சம் அளித்தார். இருவரின் ஜீவ சமாதிகளும் கோயில் வளாகத்தில் எதிரெதிரே அமைந்துள்ளன.
தø விருட்சம் இலந்தை தானாக உற்பத்தியானதாக கூறப்படுகிறது.
தல வரலாறு:
காசிக்கு வீசம் அதிகம் விருத்தகாசி எனும் திருமுதுகுன்றத்திற்கு ஈசானிய மூலையில், 6 கி.மீ., தூரத்தில் கோபருவதம் எனும் தேவஸ்தான கோபுராபுரம் உள்ளது. நந்தி தேவர், உமாதேவிக்குறிய வழிபாட்டிற்கு உதவி செய்ததால், இத்தலம் கோபருவதம் என்றும், ஆதியில் உமாதேவி சிவனை வழிபட்டதால், ஆதிசக்தீசுரம் என்றும் கூறப்பட்டது. உமாதேவி வழிபாட்டிற்கு பயன்படுத்தியதுதான் கோவில் வடக்கு பகுதியிலுள்ள கங்கை தீர்த்தம். இத்தீர்த்தத்தை பயன்படுத்தினால் நோய் நீங்குவதுடன், சரும நோய்களும் நீங்கியதாக ஐதீகம். இதில் சசிவர்னர், நந்திபாராயணர் ஆகியோர் நீராடி, சரும நோய் நீங்கி, சிவனை வழிபட்டு முக்தியடைந்தனர்.
கோபுராபுரம் என்ற ஊரில் நந்திபாராயணர் எனும் சித்தர் வெகுகாலம் தவத்தில் இருந்து வந்தார். ஒரு சமயம் அங்கு வந்த அரசன் ஒருவன் தன்னுடன் வந்த பரிவாரங்களை நிஷ்டையில் ஆழ்த்தினால்தான் அவர் உண்மையான சித்தர் என்று நம்புவேன் எனக் கூறினான். அடுத்த நிமிடம், நந்திபாராயணரின் பார்வை பட்ட மாத்திரத்தில் வந்திருந்த அனைவரும் நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டனர். இதனால், அவரின் மகிமையை உ<ணர்ந்த அரசன், தன் தவறை மன்னிக்க வேண்டினான். நந்திபாராயணரும் அவர்களை மீண்டும் பழையபடி சுயநிலைக்கு ஆக்கினார். பின்னர் அவரது ஆணைப்படி ஆதிசக்தீஸ்வரருக்கு அரசன் கோயில் ஒன்றை அமைத்தான்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சுயம்பு லிங்கம், சூரியன் சிவன் நெற்றியில் விழும், தனி சனி பகவான், சசிவர்ணர் - நந்தி பாராயணர் ஜீவசமாதி (கிழக்கு நோக்கி) அடைந்தது தனிச்சிறப்பு.