Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பத்ரகாளியம்மன்
  உற்சவர்: பத்ரகாளியம்மன்
  அம்மன்/தாயார்: பத்ரகாளியம்மன்
  தல விருட்சம்: வேப்பமரம்
  தீர்த்தம்: கோட்டைக்கேணி (புஷ்பஹரணி)
  ஆகமம்/பூஜை : சிவஆகமம் (சிவகோத்திரம்)
  புராண பெயர்: திண்டுக்கல்
  ஊர்: ஆர்.வி.நகர்
  மாவட்டம்: திண்டுக்கல்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  சித்திரை திருவிழா 15 நாட்கள், நவராத்திரி, (10நாட்கள்), அமாவாசை தோறும் பிருத்யங்ரயாகம், பவுர்ணமி விளக்கு பூஜை நடைபெறுகிறது.  
     
 தல சிறப்பு:
     
  பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் வகையில் மாதந்தோறும் அமாவாசையன்று மாலையில் சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில், ஆர்.வி.நகர், மலையடிவாரம். திண்டுக்கல்- 624001.  
   
போன்:
   
  +91 99946 46058, 81441 61608, 98947 95189 
    
 பொது தகவல்:
     
  திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பின்புறம் கோட்டைக் கேணி அருகில், வடக்குபுறம் பார்த்து அமைந்த கோயில். கோயிலில் சுடலைமாடன், பேச்சியம்மன், கொடிமரம் உண்டு. 29 அடி உயர விஸ்வரூப தரிசன காளி கிழக்கு பார்த்து உள்ளார். கோயிலில் பத்ர காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோயிலில் அர்த்த மண்டபத்தில் கோயில் குறித்த காட்சிகள் வரையப்பட்டுள்ளன.  
     
 
பிரார்த்தனை
    
  பிரார்த்தனை சீட்டுக்கள் எழுதி வைக்கின்றனர். (சூலாயுதத்தில்) 40 நாட்களில் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  திருஷ்டி நிவர்த்திக்காக, சர்ப்ப தோஷ நிவர்த்தி, ராகு, கேது தோஷ, செவ்வாய்தோஷ, திருமண தாமதத்திற்காக பரிகாரம் செய்யப்படுகிறது. சித்திரை மாதம் பூச்சட்டி, பூக்குழி இறங்குதல், அலகு குத்துதல் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  அமாவாசை தோறும் மாலை 5 மணிமுதல் பிரத்யங்ராய யாகம் இங்கு நடத்தப்படுகிறது. யாகத்தில் பக்தர்கள் பழங்கள், மிளகாய் வத்தல், நெய், நவதானியம், பல வண்ணப்பூக்கள், வஸ்திரம், 408 பச்சை மூலிகைகளை வழங்குகின்றனர். யாககுண்டத்தில் அக்னியில் அம்மன் காட்சி தருவதாக பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.  
     
  தல வரலாறு:
     
  ஆரம்ப காலத்தில் திரிசூலம் வைத்து பக்தர்கள் வழிபட்டு வந்தனர். அருள்வாக்கு சித்தர் ஒருவர் மூலமாகி பெற்று பத்ரகாளியம்மன் சிலை வழிபட துவங்கினர். திண்டிமாசூரனை பல நூற்றாண்டுகளுக்க முன் பத்ரகாளி அம்மன் ஆட்சி செய்த இடமாக இப்பகுதி கருதப்படுகிறது. அபிராமி அம்மனே பத்ர காளியம்மனாக இங்கு அருள்பாலிக்கிறார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் வகையில் மாதந்தோறும் அமாவாசையன்று மாலையில் சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar