பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி, திருவோணம், மூலநட்சத்திரம், சுவாதி, சித்திரை, சங்கடஹர சதுர்த்தி, ஒவ்வொரு சனியும் சிறப்பு வழிபாடு, தனுர்மாத பூஜை, (மார்கழி முழுவதும்) காலை 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, ஸ்ரீராமநவமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, தமிழ் புத்தாண்டு முதல் நாள், கார்த்திகை தீபவிழா, ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஜென்ம நட்சத்திர விழா, சக்கரத்தாழ்வாருக்கு ஜென்ம நட்சத்திர விழா, விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி (நான்கு) சனிவாரம் சிறப்பு வழிபாடு பூஜை நடைபெறுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 7.15 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.15 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். சனிக்கிழமை இரவு 9.30 வரை.
ஆஞ்சநேயர், விநாயகர் வடக்கு பார்த்துள்ளனர். நரசிம்மர், சக்கரத்தாழ்வார், வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார் கிழக்கு பார்த்து உள்ளனர். கோயில் உள்புறத்தில் சஞ்சீவி ஆஞ்சநேயர் சிற்பமும், கிருஷ்ணரின் சிற்பமும் தனியாக உள்ளன.
பிரார்த்தனை
வெங்கடாஜலபதி சன்னதி பெயர் சூட்டுதல், முடிகாணிக்கை பக்தர்கள் வேண்டுதல், திருமணதடை நீக்குதல், வேலை வாய்ப்பு பெற்றுதரல், கேட்டவருக்கு கேட்டவரம் தரல், கடன்பட்டவர்களின் வேண்டுதல் கடன் நீக்குதலுக்கு இங்கு பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் வடைமாலை சாற்றுதல், நட்சத்திரப்படி அர்ச்சனை செய்து பலன்பெறல், துளசிமாலை அணிவித்தல் இங்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது.
தலபெருமை:
இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் ஒவ்வொன்றும் இங்கேயே தயாரிக்கப்படுகிறது. இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டு செல்பவர்கள், தாங்கள் நினைத்த காரியங்கள் அதிகளவில் கைகூடுகிறது என வெகு சில நாட்களில் வந்து கூறுகின்றனர். இப்பகுதி பக்தர்கள் இவரை ஜெனரல் டாக்டர் என அழைக்கின்றனர்.
தல வரலாறு:
கடந்த 1999ல் ஆஞ்சநேயர் பிரதிஷ்டையானார். 2001ல் தும்பிக்கை ஆழ்வார் (விநாயகர்) பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்குள்ள ஆஞ்சநேயர் தனது வாலை, தனது தலையில் வைத்துள்ளது சிறப்பமாகும். அந்த வாலில் மணி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அத்தகைய தோற்றமுள்ள ஆஞ்சநேயர் சக்தி வாய்ந்தவர் என்பது ஆன்மிக மரபு. 2005ல் தென்திருப்பதி வெங்கடாஜலபதியும் பத்மாவதி தாயாரும் பிரதிஷ்டையானார்கள். அவர்கள் இருவரும் எழுந்தருளிய பின் 2008ல் நரசிம்மர், 2012ல் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 1999ல் கும்பாபிஷேகம், 2012ல் மகா கும்பாபிஷேகமும் 2013-14ல் வருடாந்திர பூர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
இருப்பிடம் : திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து வடக்கே 2 கி.மீ., தூரத்தில் உள்ளது. டவுன் பஸ் வழியுண்டு. காட்டாந்திரி பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். ஆட்டோ வசதியுண்டு.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திண்டுக்கல்
அருகிலுள்ள விமான நிலையம் :
மதுரை
தங்கும் வசதி : திண்டுக்கல்
ஹோட்டல் பார்சன் கோர்ட் போன்: +91-451-645 1111 ஹோட்டல் மகா ஜோதி போன்: +91-451-243 4313 ஹோட்டல் கோமத் டவர்ஸ் போன்: +91-451-243 0042 ஹோட்டல் வேல்ஸ் பார்க் போன்: +91-451-242 0943 ஹோட்டல் செந்தில் ரெசிடென்ஸி போன்: +91-451-645 1331