Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு யோக விநாயகர், வெற்றி விநாயகர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு யோக விநாயகர், வெற்றி விநாயகர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: யோக விநாயகர், வெற்றி விநாயகர்
  தல விருட்சம்: வேம்பு, அரசன்
  தீர்த்தம்: பாசிமுத்தான் ஓடை
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  புராண பெயர்: சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டிற்கு பயிற்சிஅளித்ததால் பயற்சிப்பள்ளிப்படை என்பதே பள்ளிப்படை என வந்துள்ளது.
  ஊர்: பள்ளிப்படை
  மாவட்டம்: கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  விநாயகர் சதுர்த்தி, மாதம்தோறும் சங்கநகர சதுர்த்தி, பங்குனி உத்திரம், பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.  
     
 தல சிறப்பு:
     
  சித்திரைமாதம் முதல்வாரம் சூரிய ஒளி படுகிறது.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு யோக விநாயகர், வெற்றி விநாயகர் திருக்கோயில், மணலூர் அஞ்சல், சிதம்பரம் வட்டம், பள்ளிப்படை, கடலூர் மாவட்டம்-608001.  
   
போன்:
   
  +91 80153 11214, 94434 81914 
    
 பொது தகவல்:
     
  கிழக்குப் பக்கம் வாயில் அமைந்துள்ளது. பாசிமுத்தான் ஓடையின் கிழக்கு பக்க கரையில், தலவிருட்சத்துடன், நுழைவு வாயிலில் உள்ளது. தலவிருட்சமான அரச மரத்தில் லிங்கம் மற்றும் பாம்பு தோற்றம் உள்ளது. கோயில் நுழைவு வாயில் அருகில் இருபக்கமும் யானை தும்பிக்கையால் தாமரை மலர் மீது நீர் ஊற்றுவது போன்றும் அருகில் மயில் கிழக்குப் பக்கம் நின்று கூவுவது போன்ற சிற்பம் உள்ளது. கிழக்குப் பக்கம் பார்த்து நாகர், மனித உருவில் ஆஞ்சநேயர் நின்ற கோ லத்தில் அருள்பாலிக்கிறார்.

கிருஷ்ண பரமாத்மா காளிங்க நாதனை தன் காலால் மிதித்து, வாலை பிடித்து தூக்கி வாயில் இருந்த விஷத்தை வெளியேற்றுவது போன்ற சிற்பம் உள்ளது. இவைகள் அனைத்தும் புதை பொருளாக கிடைத்தவை. கோயில் நுழைவு வாயில் முன் இடபக்கம் தும்பிக்கை இல்லாமல் (உடைந்த நிலையில்) விநாயகர் அமர்ந்த நிலையிலும், கருவறையில் யோக விநாயகர் தேங்காய்க்கும் நடுவிலும், வெற்றி விநாயகர் எண்ணெய் பாட்டிலுக்கும் நடுவிலும் அருள்பாலிக்கின்றனர். மேலும் தெற்கு நோக்கி நடராஜர், கருடஆழ்வார், அக்னிலிங்கம் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டவர்கள் அருள்பாலிக்கின்றனர்.
 
     
 
பிரார்த்தனை
    
  கேட்ட வரம் கிடைக்கிறது. மேலும் வாகன விபத்தை தடுக்கப்பதால் இங்கு பிரார்த்திக்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  நெய் தீபம், எருக்கு, அருகம்புல்லில் மாலை சார்த்தி நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  சிதம்பரம் நடராஜர், தில்லை காளியம்மன் கோயில் அமைந்திருப்பது சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது.  
     
  தல வரலாறு:
     
   கிள்ளையில் இருந்து பிச்சாவரம் சாலையில் நெடுஞ்சாலையோரம் உள்ள இடத்தில் சிலர் வீடுகட்டி வசித்தனர். பாவாடை என்பவரும் சிறு வயதில் திருணமாகி மனைவி, பிள்ளைகளுடன் வசித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றிய போது வீடு இழந்தவர் வறுமையில் வாடி செய்வதறியாமல் தவித்தவர் சாலையோரம் நடந்து சென்றார். அப்போது பன்றி மேய்க்கும் குரவர் ஒருவர் ஏன் முகம் சோர்ந்து போய் உள்ளாய்? என்று கேட்டவர் அதோ அந்த இடத்திற்கு சென்று பார் அதிசயம் காண்பாய் என சொல்லியுள்ளார். பாவாடை நடந்தே சென்று திரும்பி பார்த்த போது பன்றிக்கூட்டமும் இல்லை, சம்மந்தப்பட்ட குரவரும் இல்லை.

அதிர்ச்சியில்  சம்மந்தப்பட்ட இடத்திற்கு வந்த போது சிரித்த படி ஓர் உருவம் தென்பட்டுள்ளது. தவறி விழுந்த இடத்தில் காலில் ஒரு கல் தென்பட்டதை தோண்டி பார்த்த போது தும்பிக்கை இல்லாத விநாயகர் சிலை. அதை எடுத்து பனை ஓலையில் கொட்டகை அமைத்துள்ளார். அவரை வணங்கியவருக்கு சில தினங்களில் அரசு சார்பில் இலவச வீட்டுமனை கிடைத்துள்ளது. இந்த விநாயகர் ஆசியால் கிடைத்தது எனக்கூறி அவருக்கு யோக விநாயகர் என பெயர் சூட்டி அழைத்தார். அதன் கோயில் கட்ட பல்வே றுப்பகுதிகளுக்கு சென்று யாசகம் எடுத்து கோயில் கட்ட முயன்ற போது பல்வேறு கருங்கல் சிலைகள் கிடைத்துள்ளது. அவற்றை அப்பகுதியில் வைத்து வழிபாடு நடத்தி வருகிறார். வாகன விபத்து மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வெற்றி மற்றும் யோக விநாயகர் அருள்பாலிக்கின்றனர்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சித்திரைமாதம் முதல்வாரம் சூரிய ஒளி படுகிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar